Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

12 December 2021

பூஜ்ஜிய கலந்தாய்வு நடத்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் வலியுறுத்தல்


தமிழகத்தில் 5 ஆண்டாக நடத்தாமல் உள்ள வட்டார கல்வி அலுவலர் டிரான்ஸ்ப ரை 'ஜீரோ' கவுன்சிலிங்காக நடத்த வேண்டும், என கல்வி அலுவலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கல்வித்துறையின் கீழ் தொடக்க, நடுநிலை, உயர் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள், அரசு நலத்திட்டம் வழங்கல் உள் ளிட்ட பணிகளை கண் காணிக்கும் பொறுப்பில் வட்டார அளவில் கல்வி அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். மாநில அளவில் வட்டார கல்வி அலுவலர்கள் உள்ளனர். இவர் களுக்கு ஆண்டுதோறும் மே மாதம் பொது மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும்.

கவுன்சிலிங் நடத்துவதின் மூலம் வட்டார கல்வி அலுவலர்கள் பதவிஉயர்வு மூலம் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியராவ தற்கான வாய்ப்பு கிடைக் கும். ஆனால் கடந்த 5ஆண்டாக இவர்களுக்கான டிரான்ஸ்பர் கவுன்சிலிங் நடத்தப்படவில்லை . 2016ல்தான் முழுமையாக டிரான்ஸ்பர் வழங்கப்பட்டது.)

அதற்குபின் 2019 ல் நடந்த கவுன்சிலிங்கில் 3 ஆண்டிற்கு மேல் ஒரே இடத்தில் இருந்த அலுவலர்கள் மட்டுமே டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர். 2016க்கு பின் தொடர்ந்து 5 ஆண்டுகளாக 681 வட்டார கல்வி அலுவலர்களுக்கும் பொது இடமாறு தல் கவுன்சிலிங் நடத்தவே இல்லை .

இதனால் உயர்நிலை பள்ளி தலைமை' ஆசிரியர் பதவி கிடைக்காமல் வட்டார கல்வி அலுவலர்கள் தவித்து வருகின்றனர்.

எனவே வட்டார கல்வி அலுவலர்களுக்கு 'ஜீரோ' கவுன்சிலிங்கை நடத்த - வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - மாநில பொது செயலாளர்
கே.காமராஜ் கூறியதாவது, - தமிழக அளவில் கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்த வேண்டும் என முதல்வரிடம் புகார் அளித்துள்ளோம் என்றார்



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES