ஏற்கனவே தமிழ்நாட்டில் இணையதளம் மூலம் தேர்வுகள் நடத்தப்படாது என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது பல்கலை. மானியக்குழுவும் அதை உறுதிபடுத்தி உள்ளது. டெல்லி: 2020ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா காரணமாக அரசு ஊரடங்கு அறிவித்தது. இதனால் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் பாடம் படித்து வந்தனர். மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க அரசாங்கமும் ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதி அளித்திருந்தது.
இதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டது. பாடம் மட்டும் இன்றி தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா தொற்று குறைய தொடங்கியதால் அனைத்து கல்லூரிகள் திறக்கப்பட்டன. தேர்வுகளும் ஆன்லைனில் நடத்த வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால் இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆன்லைன் வகுப்புகள் புரியவில்லை என்பதால் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாணவர்கள் நேரடி தேர்வு எழுத 2 மாதம் அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இனிமேல் கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகள் நேரடியாக நடத்த வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழக மானிய குழு செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் கடிதம் எழுதியுள்ளார். இனிமேல் ஆன்லைனில் தேர்வுகள் நடத்த வேண்டாம் என பல்கலைக்கழக மானிய குழு திட்டவட்டமாக கூறியுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE