வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி இன்றுடன் முடிவடைகிறது. ஏற்கெனவே கடைசி தேதி நீட்டிக்கப்பட்டதால் பல லட்சக்கணக்கானோர் இன்று ஒரே நாளில் வருமான வரித் தாக்கல் செய்துள்ளனர். இன்று மட்டும் 20 லட்சத்துக்கு மேற்பட்டோர் வருமான வரித் தாக்கல் செய்துள்ளனர்.
வருமான வரித் தாக்கலுக்கான கடைசி தேதி மேலும் நீட்டிக்கப்படுமா என வரி செலுத்துவோரிடையே கேள்வி எழுந்தது. இந்நிலையில், கடைசி தேதி மேலும் நீட்டிக்கப்படாது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வருவாய் துறை செயலாளர் தருண் பஜாஜ் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, “வருமான வரித் தாக்கல் சுமூகமாக நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் 3 மணி வரை மொத்தமாக 5.62 கோடி பேர் வருமான வரித் தாக்கல் செய்துள்ளனர்.
இன்று ஒரே நாளில் 20 லட்சத்துக்கு மேற்பட்டோர் வருமான வரித் தாக்கல் செய்துள்ளனர். இந்த ஆண்டில் 60 லட்சம் கூடுதல் நபர்கள் வருமான வரித் தாக்கல் செய்துள்ளனர். வருமான வரித் தாக்கலுக்கான கடைசி தேதியை நீட்டிக்க எந்தவொரு முன்மொழிதலும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE