Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

19 December 2021

பொது மாறுதல் கலந்தாய்வு சாதக, பாதகங்கள்





கேள்வி:

எட்டு வருடம் ஒரே பள்ளியில் பணியாற்றி இருந்தால் கண்டிப்பாக இடமாற்றமா?

பதில்:

தற்போது வெளியிடப்பட்ட அரசாணைக்கு பின் பணி அமர்த்த படும் அனைவருக்கும் அவர் பணியேற்ற இடத்தில் 8 ஆண்டுகள் மட்டுமே இருக்கமுடியும். பின்னர் அவருக்கு கட்டாய பணிமாறுதல் வழங்கப்படும். இது தற்போது பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொருந்தாது.

பணிநிரவல் தகவல்கள்

1.உபரி ஆசிரியர்கள் மாற்றப்பட்ட பிறகே விருப்ப மாறுதல்...

2.உபரி ஆசிரியரை எங்குவேண்டுமானலும் மாற்றலாம்...(உபரியாக உள்ள அனைத்து வகை ஆசிரியர்களையும் மாவட்டம் விட்டு மாவட்டம் )

3.உபரி ஆசிரியர் பணியிடங்கள் என்பது பள்ளியில் சேர்ந்த தேதி தான்...

4.ஒரு முறை உபரி என மாற்றப்பட்ட வரை மறுபடியும் உபரி என 3 ஆண்டு வரை மாற்ற கூடாது ...அவர் விரும்பினால் மாறுதல் கோரலாம்.

5. 40% மேல் கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் உபரி ஆசிரியர் எனில் அவருக்கு அடுத்தவரே உபரி ஆசிரியர்.

6.கலந்தாய்வு ஆண்டில் பணி நிறைவு பெறுபவர் உபரி ஆசிரியர் எனில் அவருக்கு அடுத்தவர் உபரி ஆசிரியர்.

7.NCC ஆசிரியர் உபரி எனில் அவருக்கு அடுத்தவர் உபரி ஆசிரியர்.

8.பணியில் சேர்ந்த தேதி ஒன்றாக இருந்தது எனில் DOB கணக்கில் கொள்ளப்படும்.

9.உபரி ஆசிரியர்க்கு மூத்தவர் விரும்பினால் உபரிக்கு பதிலாக மூத்த வரை மாற்றலாம்.

10. இதற்கு முன்னர் வேறு ஒன்றியங்களுக்கு உபரியாக சென்ற ஆசிரியர்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை...

11. LKG ,UKG மையங்களுக்கு சென்ற ஆசிரியர்களை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை...

12. இனிவரும் காலங்களில் தற்போது வெளியான அரசாணையை மட்டுமே பின்பற்றி கலந்தாய்வு நடைபெறும்

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES