பள்ளிக்கல்வித்துறையில் 2 ஆண்டுகள் தொடர்ந்து ஒரே இடத்தில் பணிபுரிந்தவர்களுக்கு கட்டாயம் இடமாறுதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்க கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கான பணியிட மாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு குறித்த வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பான சுற்றறிக்கையில் வட்டார கல்வி அலுவலர்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் பணியாற்றி வருவதால் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டு வருவதாகவும் அதனை தடுக்கும் வகையில் கலந்தாய்வில் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் வட்டார கல்வி அலுவலர்கள் கட்டாயமாக வட்டார கல்வி அலுவலர்கள் கட்டாயமாக பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் எனவும், 2 ஆண்டுகள் பணி முடிக்காதவர்களும் விருப்பத்தின் அடிப்படையில் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 28 ஆம் தேதி காலை மாவட்டத்திற்குள்ளும், மாலையில் மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கும் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE