சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி: மனித வள மேலாண்மை துறை மானிய கோரிக்கையின் போது, 'தமிழ் மொழி தேர்வில் குறைந்தது, 40 சதவீத மதிப்பெண் பெற்ற வர்களுக்கு தான், அரசு பணி வாய்ப்பு வழங்கப்படும்' என்று அறிவிக்கப் பட்டது.இது குறித்து, பல விவாதங்கள் நடத்தி, சட்ட
இனிமேல், தமிழக அரசு பணிக்கு, எந்த தேர்வு முகமை தேர்வை நடத்தினாலும், தமிழ் புலமை, தமிழகம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.அதில், 40 சதவீத மதிப்பெண் பெற்றதால் தான், மற்ற தேர்வு தாள்கள் திருத்தப்படும்.டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 4' போன்ற தேர்வுகளில், ஆங்கில மொழித்தாள் நீக்கப்படும்; தமிழ் மொழித்தாள் மட்டுமே இடம் பெறும்.இதிலும், 40 சதவீத மதிப்பெண் பெற்றால் தான், மற்ற விடைகள் திருத்தப் படும்.பத்தாம் வகுப்பு கேள்விகளில், 40 சதவீத மதிப்பெண் பெறாவிட்டால், அரசு பணிகளில் அமர முடியாது. இனி நடக்கும் தேர்வுகளுக்கு இது பொருந்தும். சரியான பணியாளர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களை சிறப்பாக செயல்பட வைப்பது அரசின் பணி.
தேர்வு முறையில் மாற்றம் தேவை. தமிழகத்தில் அரசு துறைகளில், 14 லட்சம் முதல் 15 லட்சம் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.ஆனால், ஒன்பது லட்சம் பேர் தான் பணியில் உள்ளனர். நிறைய இடங்கள் காலியாக உள்ளன; அவற்றை நிரப்ப போதுமான நிதி இல்லை.தமிழ் மொழித்தாள் தேர்ச்சி கட்டாயமாக்கப் பட்டதால், அரசு பள்ளி மாணவர்கள், அரசு பணிக்கு செல்வது அதிகரிக்கும்.பணியாளர்களின் பணி தரத்தை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
தமிழர் அல்லாதவர்கள் எவ்வளவு பேர் பணியில் உள்ளனர் என்ற புள்ளி விபரம் இல்லை. கோப்புகள் தாமதமாவதற்கும், ஊழியர்கள் வயதுக்கும் சம்பந்தம் கிடையாது. கடந்த ஆட்சியில், ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதற்கு காரணம் தெரியவில்லை.அறிவியல் முன்னேற்றம் காரணமாக, வாழக்கூடிய வயது அதிகரித்து வருகிறது.இதன் காரணமாக, வளர்ந்த நாடுகளில் ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்படுகிறது.தமிழகத்தில் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்பட்டதால், பணியாளர் காலியிடங்கள் குறைவாக உள்ளது.
முதல்வருடன் ஆலோசித்து, பணியாளர் தேர்வு, பதவி உயர்வு என பல முடிவுகளை எடுக்க உள்ளோம். ஓய்வு பெறும் வயதிலும் மாற்றம் வரலாம்.
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை, மத்திய தேர்வு வாரியங்கள் நடத்திய தேர்வுகள், மண்டல அளவில் நடத்தப்பட்டன. அது தேசிய மயமான பின், நம் பங்கேற்பு மிகவும் குறைந்து விட்டது. மண்டல அளவிலான தேர்வு நடத்தப்பட்ட போது, 500 முதல் 800 பேர் ஆண்டுதோறும், மத்திய அரசு பணிகளுக்கு சென்றனர். தேசிய மயமான பின் 100 பேர் கூட செல்வதில்லை.
இவ்வாறு தியாகராஜன் தெரிவித்தார்.
\
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE