மத்திய அரசின் பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி.,யில் பதிவு செய்து, ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்வோருக்கு, ஐந்து ஆண்டுகள் வரை, உதவி தொகையுடன் படிப்பை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு பிரச்னைகளால், ஆராய்ச்சி படிப்புக்கான கால வரையறை முடிவோருக்கு, கூடுதல் அவகாசம் வழங்கி, கடந்த மார்ச்சில் யு.ஜி.சி., சலுகை அளித்தது. இதைத் தொடர்ந்து, மீண்டும் ஆறு மாதங்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, யு.ஜி.சி.,யின் அறிவிப்பு நேற்று வெளியானது. இதன்படி, ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்வோர், தங்களது கட்டுரை சமர்ப்பித்தல் மற்றும் ஆராய்ச்சி கட்டுரை வெளியிடுதல் ஆகியவற்றுக்கு, இம்மாதம் 31ம் தேதியில் இருந்து, ஜூன் 30 வரை ஆறு மாதங்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது. பல்கலைகள், தங்கள் மாணவர்களுக்கு இந்த சலுகையை வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE