தமிழக அரசு பணியாளர்கள் வழக்கமாக அவர்களின் 58 வயதில் ஓய்வு பெறுவதற்கான வரைமுறை அமலில் இருந்து வந்தது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா பெருந்தொற்று பரவல் தமிழகத்தில் பரவி வருவதால் அரசு கொரோனா நோய் தடுப்பு நடைமுறைகளுக்காக அதிக அளவிலான நிதியை செலவிட நேர்ந்தது.
மேலும், தொற்று அபாயத்தால் தொழில்களும் ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக முடங்கி இருந்தது. இதனால் தமிழகத்தில் அதிக அளவிலான நிதி நெருக்கடி ஏற்பட்டது. அரசின் பொருளாதார சிக்கலை தீர்க்கும் வகையில் பல முடிவுகள் எடுக்கப்பட்டது.
அதன் ஒரு படியாக, கடந்த 2020ம் ஆண்டு அரசு ஊழியர்கள் ஓய்வு பெரும் வயது 58ல் இருந்து 59 ஆக மாற்றப்பட்டது. இதனால் அரசு ஊழியர்களின் ஓய்வு கால பணப்பலன்கள் கொடுக்கும் காலம் தள்ளிவைக்கப்பட்டது.
அதன் பின்னர் கொரோனா இரண்டாம் அலை பரவலின் போது, அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் அரசின் முடிவு குறித்து அதிருப்தியில் இருந்து வந்தனர். இது தொடர்பாக நீதிமன்ற வழக்கு ஒன்று தொடரப்பட்டது. மேலும், அரசு 2021மே 30ம் தேதி முதல் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு இறுதி ஆணை பொருந்தும் என்று அறிவித்தது.
இந்நிலையில், கடந்த மே மாதம் முதல் திமுக தலைமையிலான புதிய அரசு ஆட்சிக்கு வந்தது. இதனால் அரசு ஊழியர்கள் ஓய்வு வயது தொடர்பான பல கோரிக்கைகள் அரசிடம் வைக்கப்பட்டு வந்தது. ஆனால் அரசு முடிவான பதில் எதையும் அளிக்காமல் இருந்து வந்தது.
இந்நிலையில், தமிழக முதல்வர் அரசு ஊழியர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களின் வயது 58 ஆக மாற்ற முடிவு செய்து அதற்கான அரசாணையை வெளியிடுவதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இந்த ஆணை வெளியிடப்பட்டு, ஜனவரி 1முதல் அமலுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. ஆணை வெளியிட்டாலும், தற்போது ஓய்வுக்கால பணபலன்கள் அளிப்பதற்கு பதிலாக அரசு பத்திரங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE