வாட்ஸ்அப் நிறுவனம் ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்கு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துவதாக வெளியிட்டது. அதன் படி, “Delete messages for everyone” என்ற அம்சத்தில் மாறுதல்களைக் கொண்டுவந்தது.
வாட்ஸ்அப் தனது கூகுள் பிளே பீட்டா திட்டத்தின் வழியே புதிய அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனைக் கொண்டுவருகிறது. சமீபத்திய வாட்ஸ்அப் புதுபிப்புகள் வாட்ஸ்அப்பில் பகிரப்படும் செய்திகளை ‘டெலீட் ஃபார் எவரிஒன்” என்ற ஆப்ஷனை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த புதிய பீட்டா வெர்ஷனும், குழுவில் இருக்கும் செய்திகளை நீக்கும் அம்சத்தோடு தான் தொடர்புடையது. இந்த புதிய பீட்டா 2.22.1.1 வெர்ஷனில் என்னனென்ன புதிய மாற்றங்கள் அல்லது ஆட்-ஆன்கள் இருக்கிறது என்று பார்க்கலாம்.
சில நாட்களுக்கு முந்தைய அப்டேட்டின் படி, வாட்ஸ்அப் நிறுவனம் ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்கு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துவதாக வெளியிட்டது. அதன் படி, “Delete messages for everyone” என்ற அம்சத்தில் மாறுதல்களைக் கொண்டுவந்தது. அனைவருக்கும் மெசேஜை நீக்கும் ஆப்ஷன் ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டும் செயல்படுத்த முடியும். ஆனால், அந்த காலவரம்பை நீட்டிக்க வாட்ஸ்அப் முடிவெடுத்தது. எனவே, வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பீட்டா 2.2147.4 வெர்ஷனில், டெலீட் ஃபார் எவரிஒன் என்ற ஆப்ஷனின் கால வரம்பை 7 நாட்கள் மற்றும் 8 நிமிடங்கள் வரை என்று நீட்டித்தது.
இந்த புதிய அப்டேட்டின் படி, தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் ரிலீஸ் செய்துள்ள 2.22.1.1 அப்டேட், வரும் ஆண்டின் முதல் பீட்டா அப்டேட்டாக இருக்கும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இந்த அப்டேட் படி, வாட்ஸ்அப் குழுக்களில் உள்ள டெலீட் ஆப்ஷன்களில் புதிய மாறுதல்களைக் கொண்டுவர இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதாவது, நீங்கள் வாட்ஸ்அப் குழுவின் அட்மினாக இருந்தால், குழுவில் பகிரப்படும் அனைவரும் மெசேஜ்களை “delete for everyone” ஆப்ஷனைப் பயன்படுத்தி நீக்க முடியும்.
வாட்ஸ்அப் பீட்டா ஆண்ட்ராய்டு 2.22.1.1 பற்றிய விளக்கம்:
இந்த அம்சத்தின் பெயர் – Delete message for everyone
இதன் ஸ்டேட்டஸ் – டெவலப்மென்ட் ஸ்டேஜில் உள்ளது
எப்போது அனைவருக்கும் கிடைக்கும் – இதைப் பற்றிய செய்தியை வாட்ஸ்அப் வெளியிட்டாலும், இது எதிர்காலத்தில் தான் அனைவருக்கும் கிடைக்கும் அம்சமாக சேர்க்கப்படும்.
இந்த வெர்ஷனை நான் அப்டேட் செய்துவிட்டேன். ஆனாலும் என்னால் இந்த ஃபீச்சர் இருப்பதைப் பார்க்க முடியவில்லை, ஏன்? – தற்போது இந்த அம்சம் டெவலப்மென்ட் நிலைஹில் இருப்பதால், இது பீட்டா டெஸ்டர்களுக்கு இன்னும் அப்டேட் செய்யப்படவில்லை.
இது எல்லா ஆண்ட்ராய்டு யூசர்களுக்கும் கிடைக்குமா? – புதிய அம்சங்கள் பீட்டா யூசர்களுக்கு மட்டுமே முதலில் வெளியிடப்படும். பின்னர் சில வாரங்களுக்குப் பிறகு, அனைத்து ஆண்ட்ராய்டு யூசர்களுக்கும் அப்டேட் வெளியாகும்.
இந்த அம்சம், வாட்ஸ்அப் குழுவில் எவ்வாறு காட்சியளுக்கும் என்பது பற்றிய வாட்ஸ்அப் டெஸ்டிங் குழு பகிர்ந்த ஸ்க்ரீன்ஷாட் இங்கே.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE