Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

03 December 2021

அச்சத்தை கிளப்பும் ஒமைக்ரான் வைரஸ்; தற்போதைய நிலவரம் என்ன? - லேட்டஸ்ட் 10 அப்டேட்ஸ


தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் என்ற கொரோனா வகை டெல்டா வகையைவிட 5 மடங்கு வேகமாக பரவக்கூடியது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட ரிஸ்க் நாடுகள் என்று அழைக்கப்படும் 12 நாடுகளில் இருந்து வந்த 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதில் கர்நாடகாவைச் சேர்ந்த 2 ஆண்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது

தென்னாப்ரிக்கா தவிர மற்ற நாடுகளிலும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவிலும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் இதன் தீவிரம் குறித்து இன்னும் தெளிவான விவரங்கள் இல்லை.

இந்தியாவில் டெல்டா வகை கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தபோதும் தடுப்பூசி செலுத்துதலின் வேகம் அதிகரிக்கப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது. அதேபோல் தடுப்பூசி இன்னும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் ஒமைக்ரான் வைரஸின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அறிவியல்பூர்வமான சான்றுகள் கிடைக்கப்பெறவில்லை.

ஒமைக்ரான் வகைக்கு எதிராக செயல்படும் விதமாக கொரோனா தடுப்பூசியை மாற்றியமைக்க முடியும் என ஜெர்மனி பாரத் என் பயோடெக்கின் தலைமை நிர்வாக அதிகாரி உகுர் சாஹின் தெரிவித்திருக்கிறார். கொரோனா உருமாறிக்கொண்டே இருந்தாலும் அதிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ரிஸ்க் நாடுகளிலிருந்து வந்த 16 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்ட்வியா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர்களில் யாருக்கேனும் ஒமைக்ரான் வகை தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிய மரபணு சோதனை நடத்தவிருப்பதாகவும் தெரிவித்தார்.

தென்னாப்ரிக்காவிலிருந்து 4 நாட்களுக்கு முன்பு திரும்பியவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய சுகாதாரத்துறை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மட்டுமே திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் மற்றும் மல்டிப்ளக்ஸ்களுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று கர்நாடக அமைச்சர் ஆர். அசோகா தெரிவித்திருக்கிறார். மேலும் தென்னாப்ரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பரிசோதனை செய்யத்தவறிய பயணிகளை தேடிவருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

தென்னாப்ரிக்காவிலிருந்து நாடு திரும்பியோர் ராஜஸ்தான் சுகாதார பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டு கொரோனா மரபணு பரிசோதனை செய்தபிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

தென்னாப்ரிக்காவிலிருந்து இந்தியா வந்ததில் ஒமைக்ரான் தொற்று உறுதியான 2 பேரில் ஒருவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். மற்றொருவர் தென்னாப்ரிக்காவைச் சேர்ந்தவர். அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியிருந்த நிலையிலும் நட்சத்திர விடுதியில் தங்கி இங்கு சில மீட்டிங்குகளில் கலந்துகொண்டுள்ளார். பின்னர் அவர் துபாய்க்கு சென்றிருக்கிறார். அவருக்கு எடுக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் சோதனையில் முதலில் ஒமைக்ரான் தொற்று உறுதியானது தெரியவந்துள்ளது. பின்னர் துபாய்க்குச் சென்ற அவருக்கு தொற்று இல்லை என்ற ரிப்போர்ட்டும் வந்துள்ளதால் இது ஆராய்ச்சியாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

டெல்டா வகை பாதிப்பை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஒமைக்ரான் வகை பாதிப்பையும் எதிர்த்துப்போராட அடித்தளமாக இருக்கவேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. அதேநேரத்தில் சில நாடுகள் பயணக்கட்டுப்பாட்டை விதிக்கலாம் என்றும் தெரிவித்திருக்கிறது.
 
கல்வித்துறையில் அனைத்து நிகழ்வுகளையும் ஜனவரி 15ஆம் தேதிவரை ஒத்திவைத்திருக்கிறது கர்நாடக அரசு.



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES