ஆ.இராமு,
மாநிலத் தலைவர்,
நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்,
DRPGTA,
7373761517.
பெறுநர்:-
மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள், பள்ளிக்கல்வி ஆணையரகம், சென்னை-6.
ஐயா,
பொருள்: நடப்பாண்டிற்கான தலைமை ஆசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில் உரிய பணி மூப்பு இருந்தும் பள்ளிகல்வி துறை நிர்வாக தேர்வு தாள் 1 மற்றும் 2 ல் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சிறப்பு நிகழ்வாக விலக்கு அளித்து பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில் சேர்க்க பரிசீலனை செய்ய வேண்டுதல் சார்பு:-
தமிழகத்திலுள் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த ஆசிரியர்களை சேர்த்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்க பள்ளிக்கல்வித்துறை உரிய செயல் முறைகளை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி உள்ளது.
அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட செயல்முறையில்
1.நிர்வாக அலுவலருக்கான கணக்கு தேர்வு,
2.மாவட்ட அலுவலக நடைமுறை நூல் தேர்வு,
3. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை நிர்வாகத் தேர்வு தாள் 1,
4.தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை நிர்வாகத் தேர்வு தாள் 2
ஆகிய நான்கு தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பெயரை மட்டும்
தலைமை ஆசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதி வாய்ந்த உரிய பணிமூப்பு உடைய ஆசிரியர்கள் நிர்வாக அலுவலருக்கான கணக்கு தேர்வு மற்றும் மாவட்ட அலுவலக நடைமுறை நூல் தேர்வுகளை ஏற்கனவே எழுதி தேர்ச்சி பெற்று அதனை பணிப் பதிவேட்டில் பதிவு செய்து வைத்து உள்ளார்கள்.
ஆனால் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை நிர்வாக தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2 ஆகிய இரண்டு தேர்வுகளை இவர்கள் இன்னும் எழுதி தேர்ச்சி பெறவில்லை.
மேற்கண்ட ஆசிரியர்கள் தற்போது தங்களது பெயர்களை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மாவட்ட கல்வி அலுவலகங்களில் முறையீடு செய்த போது பள்ளிக்கல்வித்துறை நிர்வாக தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 ஆகிய தேர்வுகளை நீங்கள் எழுதித் தேர்ச்சி பெறாததால் உங்கள் பெயர்களை தலைமையாசிரியர் முன்னுரிமை பட்டியலில் சேர்க்க முடியாது என்று கூறி மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
30.01.2020 க்கு முன்பு வரை உரிய பணி மூப்பு மற்றும் நிர்வாக அலுவலர்க்கான கணக்கு தேர்வு மற்றும் மாவட்ட அலுவலக நடைமுறை நூல் தேர்வு இவற்றில் தேர்ச்சி பெற்றிருந்தாலே அவர்கள் பெயரை தலைமையாசிரியர் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலில் சேர்க்கலாம் என்று விதிகள் இருந்த நிலையில்..
30.01.2020 அன்று வெளியிடப்பட்ட அரசாணை காரணமாக தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு கூடுதலாக பள்ளிக்கல்வித்துறை நிர்வாக தேர்வு தாள்-1 மற்றும் தாள் 2 ஆகிய இரண்டு தேர்வுகளை ஆசிரியர்கள் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது.
இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு 11 மாதங்கள் ஆன நிலையில் இரண்டு முறை மட்டுமே துறை த்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. கொரோனா பெருந் தொற்று காலத்தில் வருடத்திற்கு இரண்டு முறை துறைத் தேர்வுகள் நடத்தப்படவும் இல்லை.
மேலும் இந்த அறிவிப்பு வெளியான காலகட்டம் கொரானா பெருந்தொற்று பரவிய காலம் மற்றும் கொரோனா பெருந்தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு அதிகமாக அமலில் இருந்த கால கட்டமாகும்.
மேலும் இத்துறை தேர்வு சார்ந்த அறிவிப்பு வந்த போது பள்ளிகள் ஊரடங்கால் மூடப்பட்டு இருந்ததாலும் ,
சரியான தகவல் தொடர்பு இல்லாத காரணத்தாலும், ஆசிரியர்கள் கொரோனா பெருந் தொற்றுக்கு பயந்து மக்கள் அதிகமாகக் கூடும் இடத்திற்கு செல்ல முடியாத சூழல் இருந்ததாலும், மேற்கண்ட பணி மூப்பு உடைய ஆசிரியர்களால் பள்ளிக்கல்வித்துறை நிர்வாக தேர்வு தாள்-1, மற்றும் தாள்-2 விண்ணப்பிக்கவும், எழுதவும் தகுந்த சூழ்நிலை இல்லாமல் இருந்தது.
மேலம் பல ஆண்டுகள் முதுகலை ஆசிரியராக பணிபுரிந்து பதவி உயர்வில் செல்ல வேண்டிய காலகட்டத்தில் இது போன்று திடீரென ஒரு சூழ்நிலை அமைந்திருப்பதால் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு செல்லலாம் என்று காத்திருந்த மூத்த ஆசிரியர்கள் தங்கள் தவறை எண்ணி வருந்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் பள்ளிக்கல்வித்துறை தங்களை பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில் சேர்க்க ஒரு நல்ல வாய்ப்பை கருணையோடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனவே நடப்பாண்டில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை நிர்வாக தேர்வு தாள்-1, மற்றும் தாள்-2 ஐ எழுதி தேர்ச்சி பெறாமல் இருந்தாலும் சிறப்பு நிகழ்வாக விலக்கு அளித்து அவர்கள் தலைமை ஆசிரியர் ஆனதும் குறிப்பிட்ட ஆண்டிற்குள் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை நிர்வாக தேர்வு தாள் 1 மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை நிர்வாகத் தேர்வு தாள் 2 ஆகிய துறைத் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர்களையும் தலைமையாசிரியர் பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியலில் சேர்த்து பதவி உயர்வு வழங்க பள்ளிக்கல்வி துறை தாயுள்ளத்தோடு பரிசீலனை செய்ய வேண்டும்.
மேலும் மாவட்டம் வாரியாக தயாரிக்கப்பட்ட தலைமை ஆசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் பள்ளிக் கல்வித் துறைக்கு வரும் 30.12 .2021 அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைமை ஆசிரியர் பதவி உயர்வு இறுதி முன்னுரிமை பட்டியல் தயாரிக்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில்
இதற்கான உரிய நடவடிக்கையை உடனடியாக தாங்கள் எடுக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...
இப்படிக்கு
ஆ.இராமு
DRPGTA
இடம்: நாமக்கல்
நாள்:25:12:21
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE