Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

13 November 2021

SBI எச்சரிக்கை... இந்த லிங்க்குகளை மறந்து கூட கிளிக் செய்யாதீர்கள்



இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் KYC ஃபிராடு பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகமாகும் அதே நேரத்தில் ஆன்லைன் ஃபிராடுகளும் அதிகரித்து வருகின்றன. எவ்வளவு பாதுகாப்பு நடிவடிக்கைகள் எடுத்தாலும், ஏதோ ஒரு வகையில் உங்கள் வங்கிக்கணக்கு தகவல்களை திருடுவதற்கு ஹேக்கர்கள் கூட்டம் முயற்சி செய்து வருகிறது. தற்போது அனைத்து வங்கிகளும் KYC (know your customer) செய்வதை கட்டயாமாக்கி உள்ளதால், அதையே பயன்படுத்தி ஆன்லைன் ஃபிராடுகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் KYC ஃபிராடு பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது.

SBI தனது அதிகாரபூர்வமான டிவிட்டர் கணக்கில் KYC ஃபிராடு பற்றி டிவீட் செய்திருந்தது. “நாடு முழுவதும் KYC ஃபிராடு பரவி உள்ளது. வங்கி வாடிக்கையாளர்களுக்கு தங்கள் KYC ஐ அப்டேட் செய்யச் சொல்லி ஒரு SMS வழியே ஒரு link அனுப்பப்படும். அத்தகைய செய்திகள் எல்லாமே போலியானவை. அப்படி ஒரு SMS உங்களுக்கு வந்தால், நீங்கள் உடனே அதைப் பற்றி சைபர் கிரைமில் http://cybercrime.gov.in. இணைப்பில் புகார் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தது.

இந்த KYC ஃபிராடு எப்படி நடக்கிறது மற்றும் என்ன மாதிரியான செய்திகள் வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?\

"Dear customer your SBI Bank account has been suspended for KYC." என்ற செய்தி உங்கள் மொபைல் எண்ணுக்கு வரலாம். உங்கள் SBI வங்கிக்கணக்கு KYC காரணத்தால் முடக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். இந்த செய்தியைத் தொடர்ந்து, ஒரு லிங்க் இருக்கும். வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்ற பதற்றத்தில் உடனேயே அதை சரி செய்ய வேண்டும் என்று லிங்க்கை கிளிக் செய்யக் கூடாது. இவ்வாறான செய்தி ஏதேனும் உங்கள் மொபைல் எண்ணில் வந்தால், அவசரப்படாமல் உங்கள் வங்கியைத் தொடர்பு கொள்ளுங்கள். மேலும், இன்டர்நெட் பேங்கிங் அல்லது மொபைல் பேங்கிங் வசதி இருந்தால், நீங்கள் உடனேயே உங்கள் கணக்கு ஆக்டிவாக இருக்கிறதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

SBI வங்கி தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்காக வழங்கியுள்ள வழிகாட்டுதல் இங்கே:

உங்கள் மொபைல் எண்ணில் அல்லது மின்னஞ்சலில் வரும் அங்கீகரிக்கப்படாத எந்த இணைப்பு மற்றும் அட்டாச்மெண்ட்களை கிளிக் செய்ய வேண்டாம்.மின்னஞ்சல் அல்லது மொபைல் அழைப்பில் கூறப்படும் எந்த ஒரு மொபைல் செயலியையும் டவுன்லோடு செய்ய வேண்டாம். உங்கள் தனிப்பட்ட விவரங்களான ஆதார் எண், பிறந்த தேதி, டெபிட் கார்டு எண், CVV எண், PIN, இன்டெர்நெட் பேங்கிங் லாகின் விவரங்கள் ஆகியவற்றால் யாரிடமும் பகிரக்கூடாது.வாடிக்கையாளர்கள் தங்கள் KYC யை நிறைவேற்ற SBI வங்கி எந்த இணைப்புகளையும் அனுப்பாது.



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES