எஸ்பிஐ சமீபத்தில் அறிவித்திருக்கும் இந்த 2 கடன் வசதிகளும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
எஸ்பிஐ கஸ்டமர்ஸ் வீடு வாங்க அல்லது பைக் வாங்க இது சரியான நேரம். காரணம், இந்த இரண்டையும் வாங்குவதற்கான வாய்ப்பை சலுகையுடன் எஸ்பிஐ வழங்குகிறது.
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ-யில் லட்சக்கணக்கான மக்கள் சேமிப்பு கணக்கு, பென்சன் கணக்கு மற்றும் சம்பள கணக்குகளை தொடர்கின்றனர். இந்த கணக்குகளில் எண்ணற்ற பல சலுகைகளையும் வங்கி வழங்கி வருகிறது. பண்டிகை காலம் என்பதால் லோன் ஆஃபர், குறைந்த வட்டி என எஸ்பிஐயின் பல அறிவிப்புகள் வாடிக்கையாளர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் எஸ்பிஐ கஸ்டமர்ஸை தேடி வரும் சூப்பரான 2 சலுகைகளை பற்றி தான் பார்க்க போகிறோம். உங்களின் தேர்வு எதுவாக இருந்தாலும் இதுப்போன்ற பண்டிகைகாலங்களில் வங்கிகள் சலுகைகளுடன் தரும் ஆஃபர்களை பயன்படுத்திக் கொள்வது நல்லது.
வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ யோனோ செயலி மூலம் எப்போது வேண்டுமானாலும் ப்ரீ அப்ரூவ்ட் இருசக்கர வாகன கடனை பெறும் ஆஃபரை எஸ்பிஐ வழங்கியுள்ளது. தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் இந்த கடனை ஈஸியான பெற்றுக் கொள்ளலாம்.
ரூ. 20 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை இரு சக்கர வாகனங்களுக்கான வங்கிக் கடன்களை வழங்குகிறது. இந்த கடனை வாடிக்கையாளர்கள் 48 மாதங்களில் கட்டி முடிக்க வேண்டும். இந்த வாகன கடன்களுக்கு 10.50% வட்டியை ஆண்டுக்கு வசூலிக்கிறது கடனை பெற வாடிக்கையாளர்கள் இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை.
அடுத்தது, வீடு கட்ட நிதி இல்லாதவர்களுக்கு மற்றொரு வாய்ப்பையும் எஸ்பிஐ வழங்குகிறது. அதாவது எஸ்பிஐயின் ரியால்டி கோல்ட் லோன் மூலம் குறைந்தபட்சம் ரூ. 50 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் வரை கடனை பெற முடியும்.மொத்த கடன் மதிப்பில் 0.50% ப்ரோசசிங் ஃபீஸ் வசூலிக்கப்படும்.எஸ்.பி.ஐ. வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த கடன் வழங்கப்படும்.36 மாதங்களில் இ.எம்.ஐ. நகைக் கடனை திருப்பி செலுத்த வேண்டும். எஸ்பிஐ சமீபத்தில் அறிவித்திருக்கும் இந்த 2 கடன் வசதிகளும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு எஸ்பிஐ ஆன்லைன் தளத்தில் பார்க்கலாம் அல்லது வங்கியை நேரடியாக அணுகலாம்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE