ப்ரிபெய்ட் சேவைக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கும் ஜியோ நிறுவனம், அதுகுறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்கள் ப்ரிபெய்ட் சேவைக்கான கட்டணத்தை உயர்த்தி இருந்தன. இந்நிலையில் அவற்றை விட ஒப்பீட்டளவில் குறைவான கட்டணத்தை ஜியோ உயர்த்தியுள்ளது.
இதன்படி, பேசிக் ப்ளான் ரூ. 75-ல் இருந்து ரூ. 91 ஆக உயர்கிறது. இதில் மாதம் 3 ஜிபி டேட்டா மற்றும் போன் அழைப்புகள் இலவசம். உயர்த்தப்பட்ட மற்ற கட்டணங்களில் விபரம்...
இந்த கட்டண உயர்வு டிசம்பர் 1-ம்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதுதொடர்பாக ஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், 'லேட்டஸ்ட் 4 ஜி தொழில் நுட்பத்துடன் உலகத் தரம் வாய்ந்த சேவையை ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது. சேவையை தொடங்கும்போதே மொபைல் வீடியோ நெட்வொர்க், வாய்ஸ் ஓவர் LTE தொழில் நுட்ப சேவையை ஜியோ அளித்து வருகிறது. ஜியோவின் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம் எதிர்காலத்தில் வரும் 5ஜி, 6ஜி மற்றும் பல புதிய சேவைகளையும் எளிதாக அப்கிரேட் செய்து கொள்ள முடியும்.
இந்தியாவின் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியை ஜியோ ஏற்படுத்தி, எல்லோரும் டிஜிட்டல் சேவையை பயன்படுத்தும் நிலையை கொண்டு வந்துள்ளது. டிஜிட்டல் உலகில் இந்தியா தலைமையேற்க ஜியோ உறுதுணையாக இருக்கிறது. எல்லா தரப்பினருக்கும் ஏற்ற கட்டணத்தை ஜியோ நிர்ணயித்துள்ளது. குறைந்த கட்டணத்தில் மற்ற எந்த நெட்வொர்க்கும் வழங்காத டேட்டாவை ஜியோ வழங்கி வருகிறது' என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE