இந்தியன் கவுன்சில் ஆப் அக்ரிகல்ச்சர் ரிசர்ச்’ அமைப்பு ஆண்டுதோறும் பி.வி.எஸ்சி., (கால்நடை டாக்டர்) படிப்பு முடித்தவர்கள் மேல்படிப்பில் சேர எம்.வி.எஸ்சி., படிப்புக்காக கால்நடை துறைக்கான அகில இந்திய தேர்வு நடத்துகிறது.
இந்த தேர்வு செப்டம்பர் 17 ம் தேதி அகில இந்திய அளவில் நடைபெற்றது. இதில் திருநெல்வேலியில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பி.வி.எஸ்சி., முடித்த திண்டுக்கல் மாணவி அ.ஓவியா ஐ.சி.ஏ.ஆர். தேர்வை எழுதினார்.
இதில் அவர் அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து மாணவி ஓவியா கூறியதாவது, ஐ.சி.ஏ.ஆர்., தேர்வு எழுதி வெற்றி பெறுவதன் மூலம் கால்நடை டாக்டர் மேற்படிப்புக்கு இந்திய அளவில் உள்ள சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுக்கலாம்.ஐ.சி.ஏ.ஆர்., தேர்வில் குழப்பமாக தான் கேள்வி கேட்டிருந்தார்கள்.
அடிப்படை தெரியாமல் மேலோட்டமாக படித்தால் தேர்வு எழுதுவது சிரமம். எனவே பி.வி.எஸ்சி., படிப்பில் பாடங்களை முழுமையாக படித்தேன். ஐ.சி.ஏ.ஆர்., தேர்வுக்கு விண்ணப்பித்தவுடன் இரண்டு மாதங்களாக முழுமையாக தேர்வுக்கு தயாரானேன். பாடத்தை மேலோட்டமாக படித்தால் அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிப்பது சிரமம். எனவே அடிப்படை புரிதலுடன் படித்ததால் தான் வெற்றிபெறமுடிந்தது.
மேலும் இதற்கு முன்பு ஐ.சி.ஏ.ஆர்., தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் தேர்வை எதிர்கொள்வது குறித்து வழிகாட்டினர். அவர்களின் அறிவுரைகளும் தேர்வை எளிதில் எதிர்கொண்டு வெற்றிபெற உதவியது என்றார்.
மாணவி ஓவியாவுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுனர் தமிழிசை சவுந்திரராஜன், திருநெல்வேலி கால்நடை மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
source
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE