அரசு ஒப்புதல் வழங்கும் கிரிப்டோகரன்சிகளை மட்டும் இந்தியாவில் அனுமதிக்க திட்டம்.
இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளுக்கு கட்டுப்பாடு
மோடி அரசின் திட்டம் என்ன?
இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளை எப்படி ஒழுங்குபடுத்துவது என்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. நேற்று நடைபெற்ற சிட்னி டயலாக் மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கிரிப்டோகரன்சிகள் குறித்து எல்லா ஜனநாயக நாடுகளும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இளைஞர்களை பாதுகாக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
இந்நிலையில், கிரிப்டோகரன்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க அரசு பரிசீலித்து வருவதாக கிரிப்டோகரன்சிகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர். எனினும், கிரிப்டோகரன்சிகளை முழுமையாக தடை செய்ய அரசுக்கு திட்டம் இல்லை என்று கூறப்படுகிறது.
அதாவது, எல்லா கிரிப்டோகரன்சிகளையும் அனுமதிக்காமல், அரசு ஒப்புதல் வழங்கும் கிரிப்டோகரன்சிகளை மட்டும் அனுமதிக்க அரசு திட்டமிடுவதாக தெரிகிறது. இதன்படி, அரசு அனுமதிக்கும் கிரிப்டோகரன்சிகள் மட்டுமே எக்ஸ்சேஞ்களில் வர்த்தகமாகும். அரசு அனுமதிக்கும் கிரிப்டோகரன்சிகளை மட்டுமே முதலீட்டாளர்கள் வாங்க முடியும்.

அரசு அனுமதிக்காத இதர கிரிப்டோகரன்சிகளில் முதலீட்டாளர்களால் முதலீடு செய்ய முடியாது. இத்தகைய கட்டுப்பாடுகள் குறித்து அரசு பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர். இதுபோக, கிரிப்டோகரன்சிகள் மூலம் கிடைக்கும் லாபத்துக்கு பல்வேறு வரிகளை விதிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
கிரிப்டோகரன்சி சட்டத்தை அடுத்த மாதம் தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற அரசு திட்டமிடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.அதே சூழலில், கிரிப்டோகரன்சிகள் ஆபத்தானவை என ரிசர்வ் அங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். மறுபுறம், இந்தியாவில் ஏராளமானோர் கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்து வருகின்றனர். இதற்கு மத்தியில் கிரிப்டோ குறித்து பிரதமர் மோடியின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE