கோவையில் தனியார் பள்ளியில் படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர், ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்து அவர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் மாணவி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அதுவரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பெங்களூருவில் தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அதன்பிறகே மாணவியின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.
இந்த விஷயத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் உறுதி அளித்திருந்தனர். உயிரிழந்த மாணவியின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாய் தனது மகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார். ஒரு பெண் குழந்தையின் தந்தையாக இவர்களது வலியை என்னால் உணர முடிகிறது.
24 மணி நேரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் ஒருபோதும் தாமதபடுத்தப் படாது. இதுபோன்ற சம்பவங்கள் பெண் பிள்ளைகளின் கல்வியை பாதிக்க அரசு விடாது. பெண் குழந்தைகள் நன்றாக படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்று தமிழக அரசு விரும்புகிறது என்று தெரிவித்தார்
24 மணி நேரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் ஒருபோதும் தாமதபடுத்தப் படாது. இதுபோன்ற சம்பவங்கள் பெண் பிள்ளைகளின் கல்வியை பாதிக்க அரசு விடாது. பெண் குழந்தைகள் நன்றாக படித்து நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்று தமிழக அரசு விரும்புகிறது என்று தெரிவித்தார்
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தரம் உயர்த்தப்பட்ட மாதிரி நூலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பள்ளிகளில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் தொல்லைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அரசு பள்ளிகளில் போக்சோ சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் தனியார் பள்ளிகளிலும் போக்சோ விழிப்புணர்வு தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE