வரும் 2030-ம் ஆண்டிற்குள் 100% எலெக்ட்ரிக் வெஹிகிள் நேஷன் ஆக வேண்டும்க் என்ற இலக்கை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. எனவே நாட்டில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் விற்பனை சூடுபிடித்து வரும் நிலையில், பூம் மோட்டார்ஸ் (Boom Motors) நிறுவனம் தனது, பூம் கார்பெட் எலெக்ட்ரிக் டூ வீலரை (Boom Corbett electric two-wheeler) இந்தியாவில் ரூ.89,999 என்ற (எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த டூ வீலர் முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் இந்தியன் டிரைவிங் கண்டிஷன்களுக்கு ஏற்றவாறு இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. தவிர இதன் மூலம் போர்ட்டபிள் சார்ஜர்களுடன் மாற்றக்கூடிய ஸ்மார்ட் பேட்டரிகளை (swappable smart batteries ) அறிமுகப்படுத்தியுள்ள முதல் EV நிறுவனமாக இருக்கிறது பூம் மோட்டார்ஸ். ஆரம்ப டோக்கன் தொகை ரூ.3,000 என்ற கட்டணத்தில் இந்த புதிய எலெக்ட்ரிக் டூ வீலர்களுக்கான ப்ரீ-புக்கிங்களை பூம் மோட்டார்ஸ் நிறுவனம் துவங்கி இருக்கிறது.
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பூம் கார்பெட் டூவீலர்களை டெலிவரி செய்யும் பணி துவங்கும் என்றும் நிறுவனம் கூறி இருக்கிறது. இதனிடையே பூம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அனிருத் ரவி நாராயணன் பேசுகையில், "எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக கருதப்படும் எலெக்ட்ரிக் வாகனங்கள் அவற்றை வாங்கும் வாடிக்கையாளருக்கு மதிப்பு, வசதி மற்றும் மன அமைதியை வழங்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
5 வருட EMI-க்கு எலெக்ட்ரிக் டூ வீலர்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் முதல் EV நிறுவனமாக எங்களது பூம் மோட்டார்ஸ் இருக்கிறது. மாதம் ரூ.1,699 என்ற EMI விலையில் எங்களது தவணை திட்டம் துவங்குகிறது. மேலும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக, கையடக்க சார்ஜருடன் (portable charger) மாற்றக்கூடிய பேட்டரியை (swappable battery) நாங்கள் வழங்குகிறோம், இது எங்களது எலெக்ட்ரிக் பைக்கை எங்கும் சார்ஜ் செய்ய அனுமதிக்கும்.
இந்தியாவிலேயே சிறந்த பேட்டரி தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளோம்" என்று கூறி இருக்கிறார். பேட்டரி ஸ்வாப்பிங் என்பது ஒரு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட எலெக்ட்ரிக் வாகன பேட்டரியை நீக்கி விட்டு ஏற்கனவே சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை பொருத்தி கொள்ள உதவும் ஒரு நுட்பமாகும்.
Boom Corbett எலெக்ட்ரிக் டூ வீலரின் சிறப்பம்சங்கள்..
* பேட்டரி: 2.3kWh & ஆப்ஷனலாக 4.6kWh பேட்டரி பேக் இருக்கிறது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 200கிமீ தூரம் வரை செல்லும் என்று உறுதியளிக்கப்படுகிறது.
* போர்ட்டபிள் சார்ஜர்
* வீட்டு சாக்கெட்டுகளில் செருகக்கூடிய சிறிய சார்ஜர்
* மணிக்கு 75 கிமீ டாப் ஸ்பீட்
* 200 கிலோ வரை லோடு ஏற்ற கூடிய வகையிலான டிசைன்
* உயர் இழுவிசை எஃகினால் செய்யப்பட்ட எக்ஸோ-ஸ்கெலிட்டல் டபுள்-கிராடில் சேஸ்ஸில் பில்ட் செய்யப்பட்டுள்ளது.
* முற்றிலும் ஃபயர் ப்ரூஃப் கொண்ட பேட்டரி
* ஐந்தாண்டு உத்தரவாதம்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE