Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

17 November 2021

தமிழ்நாடு முழுவதும் நாளை ரெட் அலர்ட்!, சென்னை மக்களுக்கு மாநகராட்சி முக்கிய அறிவிப்பு


PLAY VIDEO


பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக தங்களுக்கு தேவையான குடிநீர், பால், உணவு மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை இரண்டு நாட்களுக்கு இருப்பு வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சென்னைக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் இரண்டு நாட்களுக்கு தேவையான பால், குடிநீர், உணவு ஆகியவைகளை தயாரக வைத்துக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நவம்பர் 18 அன்று சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட பகுதிகளில் மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்களில் மழைநீரை உடனடியாக வெளியேற்ற 600க்கும் மேற்பட்ட மோட்டோர் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநகராட்சியின் அனைத்து அலுவலர்களும் அதிக கனமழை பெய்தால் எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதிக கனமழையின் காரணமாக மழைநீர் தேக்கம் இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக தங்களுக்கு தேவையான குடிநீர், பால், உணவு மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை இரண்டு நாட்களுக்கு இருப்பு வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் மழைப்பொழிவு உள்ள நேரங்களில் பொதுமக்கள் நீர்நிலைகள், நிர்வழி கால்வாய்கள் மற்றும் மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்களில் அருகில் செல்பி புகைப்படம் எடுக்க கூடாது. தெருவிளக்கு மின்கம்பங்கள் மற்றும் மின்சார இணைப்பு பெட்டிகளை தொடுதல் அல்லது மரங்களின் கீழ் நிற்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

மழை தொடர்பான புகார்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்கிற உதவி எண்ணிலும் 044-25619204, 044 -25619206, 044 -25619207, 044 -25619208, 044 - 25303870 என்ற தொலைபேசி எண்களிலும் மற்றும் 94454 77205, 94450 25819, 94450 25280 மற்றும் 94450 25821 என்ற வாட்ஸ் ஆப் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அதிக கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தல் மழை தொடர்பான புகார்கள் மற்றும் நிவாரண உதவிகளுக்கு 1913 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் 044-25619204, 044-25619206, 044-25619207, 044-25619208 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்




⚡🅱️reaking கனமழை-(18.11.2021) பள்ளி/ கல்லூரிகளுக்கு விடுமுறை

updated news

👇



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES