புதுடில்லி : 'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு முடிவுகளில் தவறுகள் உள்ளன' என மாணவர்கள் பலர் புகார் தெரிவித்துள்ளனர்.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு, செப்., 12ல் நடந்தது. நாடு முழுதும் 16 லட்சம் மாணவ, மாணவியர் இந்த தேர்வை எழுதினர்.
இதற்கிடையே, நீட் தேர்வு முடிவுகள் கடந்த 1ம் தேதி வெளியாகின. மாணவர்களின் 'இ - மெயில்' முகவரிக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன. தேசிய தேர்வு முகமையின் இணையதளத்திலும் முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் உள்ளதாக, மாணவர்கள் புகார் செய்துள்ளனர்.
தேர்வில் தாங்கள் எழுதிய பதில்களை, விடைகளுடன் ஒப்பிட்டு பார்த்த போது அதிக மதிப்பெண் வந்ததாகவும், ஆனால், தேர்வில் மிக குறைந்த மதிப்பெண் வந்துள்ளதாகவும், மாணவர்கள் பலர் தெரிவித்துள்ளனர். தேர்வை நன்றாக எழுதிய பல ஆயிரம் மாணவர்கள் தோல்வி அடைந்து இருப்பதாகவும், சரியாக தேர்வு எழுதாதவர்கள், தேர்ச்சி பெற்று இருப்பதாகவும், மாணவர்கள் சிலர், 'டுவிட்டரில்' குற்றம் சாட்டியுள்ளனர்
source
நவ 05,2021 05:26
தினமலர்.
நவ 05,2021 05:26
தினமலர்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE