பென்சன் வாங்கும் ஒவ்வொருவரும் தங்களது ஆயுள் சான்றிதழை ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்க வேண்டும். கொரோனா பிரச்சினையைக் கருத்தில் கொண்டு பென்சன் வாங்கும் மூத்த குடிமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான கால வரம்பு நீட்டிக்கப்பட்டது. ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவதற்குள் அதைச் சமர்ப்பிக்காமல் இருந்தால் பென்சன் தொகை வராது.\
அரசு தரப்பு அறிவிப்பின்படி, இந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் பென்சன் வாங்குவோர் தங்களது ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். கால வரம்பு முடிவடைய இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருப்பதால் அதற்குள் சமர்ப்பிப்பது நல்லது. ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிப்பதும் இப்போது எளிதாகிவிட்டது. வங்கிக் கிளைக்குக் கூட அலையத் தேவையில்லை. தபால்காரர்கள் வாயிலாக வீட்டுக்கே வந்து ஆயுள் சான்றிதழ் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் வீட்டில் அமர்ந்தபடியே வீடியோ கால் மூலமாக ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் வசதியும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் https://www.pensionseva.sbi/ என்ற வெப்சைட்டில் சென்ற அந்த வேலையை முடிக்கலாம். வீடியோ காலில் வங்கி அதிகாரிகள் தொடர்பு கொண்டு பான் கார்டு உள்ளிட்ட விவரங்களைக் கேட்பார்கள். இவ்வாறு மிகச் சுலபமாக ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE