தமிழ்நாடு அரசு சார்பில் சிமென்ட் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘வலிமை’ சிமென்ட்’ என்ற குறைந்த விலை சிமென்டை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்த சிமென்டின் விற்பனையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வலிமை சிமென்ட் மூட்டைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிற்துறை செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சிமென்ட் கழகம் சார்பாக விற்பனை செய்யப்படும் சிமென்ட் விலை, மூட்டை ஒன்றுக்கு 360 ரூபாயாக உள்ளது. இது தனியார் சிமென்ட்டை விட 90 ரூபாய் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சிமென்ட் பற்றி பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு சிமென்ட் கழகம் சார்பில் இரண்டு தரங்களில் வலிமை சிமென்ட் தயாரிக்கப்படுகிறது. தரத்தின் அடிப் படையில், பிரீமியம் ரகம் ரூ.350 மற்றும் சுப்பீரியர் ரகம் ரூ.365 என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அரியலூரில் புதிய தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE