ரித்தின் கலிகோட்
ரித்தினின் இந்த திறமையை ஆக்கப்பூர்வமாக கொண்டு செல்ல அவரது பெற்றோர் முடிவு
இந்தியாவிலேயே இரண்டரை வயதில் இவ்வளவு விஷயங்களை இதுவரை யாரும் கூறியதில்லை
இந்திய சாதனைப் புத்தகத்தில் சிறுவன் ரித்தின் கலிகோட் பெயர் இடம் பெற்றிருக்கிறது
தமிழகத்தைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுவன், 20 நாடுகளின் தேசியக் கொடிகள், 18 உடல் பாகங்கள், 18 வடிவங்கள் உள்ளிட்டவற்றை அடையாளம் கண்டு இந்திய சாதனைப் புத்தகத்தில் (India Book Of Records - இண்டியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிர்வாகிகள்) இடம் பிடித்துள்ளார்.
சென்னை எண்ணூரைச் சேர்ந்தவர்கள் திபின் - திவ்யா தம்பதியர். ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் இவர்களுக்கு ரித்தின் கலிகோட் என்ற இரண்டரை வயது மகன் இருக்கிறார். தற்போது இவர்கள் பெங்களூருவில் வசித்து வருகின்றனர். சமீபகாலமாக, சிறுவர்களுக்கான கதை புத்தகங்கள், கார்ட்டூன் திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள், அவை செய்யும் வேலைகள் ஆகியவற்றை சிறுவன் ரித்தின் மனப்பாடமாக கூறியிருக்கிறார்.
இதனை கவனித்த அவரது பெற்றோர், ரித்தினின் இந்த திறமையை ஆக்கப்பூர்வமாக கொண்டு செல்ல முடிவெடுத்தனர். இதையடுத்து, பல்வேறு நாடுகளின் தேசியக் கொடிகள், கிரகங்கள், காட்டு விலங்குகள், வடிவங்கள், நிறங்கள் உள்ளிட்டவறை சிறுவனுக்கு அவர்கள் சொல்லிக் கொடுத்தனர். ரித்தினும் அதனை ஆர்வமாக கவனித்து வந்துள்ளார்.
இந்த பயிற்சியின் காரணமாக தற்போது சிறுவன் ரித்தின் கலிகோட், ஒன்று முதல் முப்பது வரையிலான எண்கள், 10 வகை நிறங்கள், 20 நாடுகளின் தேசியக் கொடிகள், 9 கிரகங்கள், 40 வீட்டு உபயோகப் பொருட்கள், 18 உடல் பாகங்கள், 20 வன விலங்குகள், 10 வீட்டு விலங்குகள், 18 வடிவங்கள், 20 மலர்கள், 24 காய்கறிகள், 18 தொழில்கள், 20 வாகனங்கள் ஆகியவற்றை துல்லியமாக அடையாளம் கண்டு சொல்கிறார். அதுமட்டுமின்றி, 4 குழந்தைப் பாடல்கள், ஆங்கில உயிர் எழுத்துகள் ஆகியவற்றையும் பிசிறு தட்டாமல் கூறுகிறார்.
இண்டியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்
இந்நிலையில், இதுகுறித்து அறிந்த இண்டியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிர்வாகிகள், ரித்தின் கலிகோட்டின் இந்த திறமைகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர். அப்போது, இந்தியாவிலேயே இரண்டரை வயதில் இவ்வளவு விஷயங்களை இதுவரை யாரும் கூறியதில்லை என்பதை அவர்கள் உறுதி செய்தனர். அதன் தொடர்ச்சியாக, இந்திய சாதனைப் புத்தகத்தில் சிறுவன் ரித்தின் கலிகோட் பெயர் இடம் பெற்றிருக்கிறது.

source
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE