உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களிலும் உள்ள பேரூராட்சிகள், நகராட்சிகள் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டது. இந்நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நகராட்சி, பேரூராட்சி எல்லைகளை மறுவரையறை செய்த பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் மறுவரையறை ஆணையத்தின் பரிந்துரைகள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்த மற்ற மாவட்டங்களுக்கு 2019ம் ஆண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதையடுத்து, புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஏற்கனவே ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வார்டு மறுவரையறை பணிகள் முடிந்து கடந்த மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.
உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களிலும் உள்ள பேரூராட்சிகள், நகராட்சிகள் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டது. இந்நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நகராட்சி, பேரூராட்சி எல்லைகளை மறுவரையறை செய்த பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் மறுவரையறை ஆணையத்தின் பரிந்துரைகள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களிலும் உள்ள பேரூராட்சிகள், நகராட்சிகள் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டது. இந்நிலையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நகராட்சி, பேரூராட்சி எல்லைகளை மறுவரையறை செய்த பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் மறுவரையறை ஆணையத்தின் பரிந்துரைகள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE