தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு நாளை காலை 8.30 மணிவரை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆகிய 7 மாவட்டங்களுக்கு நாளை காலை 8.30 மணிவரை ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை உட்பட தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்கக் கடலில் உருவாக்கியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு நாளை காலை 8.30 மணிவரை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஆரெஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை காலை முதல் நாளை மறுநாள் காலை வரை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி விழுப்புரம், தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரெஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE