ஏற்கனவே பல்வேறு விபத்துகளில் காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குழந்தைகளின் புகைப்படங்கள் மூலம், பெற்றோருக்கு டாக்டர்கள், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது டாக்டர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறுகையில், ‘குழந்தைகள் வீட்டில் விளையாடினாலும், சாலையில் சென்று விளையாடினாலும், குழந்தைகளை பெற்றோர் தங்களது கண்காணிப்பிலே வைத்துக்கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் விபத்துகளில் 30 சதவீத விபத்துகள் பெற்றோரின் கவனக்குறைவால் மட்டுமே ஏற்படுகிறது. தற்போது அதிகளவில் நடந்து வரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தவிர்க்க, பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதலை கட்டாயம் கற்று கொடுக்க வேண்டும். மேலும் குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செல்போன், டி.வி பார்ப்பதை தவிர்க்க வேண்டும்’ என்றார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE