3, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களின் திறன்களை மதிப்பிடு செய்யும் தேசிய சாதனை கணக்கெடுப்பு (என்ஏஎஸ்) நாடு முழுவதும் 2021 நவம்பர் 12-ம் தேதி நடைபெறவுள்ளது
மூன்று, ஐந்து, எட்டு மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கு 3 ஆண்டு காலத்துக்கு, மாதிரி அடிப்படையில் தேசிய சாதனை கணக்கெடுப்பு திட்டத்தை அமல்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
3, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களின் திறன்களை மதிப்பிடும் தேசிய சாதனை கணக்கெடுப்பு இதற்கு முன்பு கடைசியாக 2017ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி நடந்தது.
அடுத்த கட்ட தேசிய சாதனை கணக்கெடுப்பு நாடு முழுவதும் 2021 நவம்பர் 12ம் தேதி நடத்தப்படும். இது கரோனா பெருந்தொற்று காலத்தில் கற்றல் தடைகள் மற்றும் புதிய கற்றல் வழிமுறைகளை மதிப்பிட்டு, தீர்வு நடவடிக்கைகளை எடுக்க உதவும். இதற்கான தேர்வு முறைகள் மற்றும் மாதிரிகளை என்சிஇஆர்டி (கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில்) செய்துள்ளது. ஆனால் மாதிரி பள்ளிகளில் இந்த தேர்வை அந்தந்த மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து சிபிஎஸ்இ நடத்தும். தேசிய சாதனை கணக்கெடுப்பு 2021 நடவடிக்கையில் மத்திய, மாநில அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளும் உள்ளடங்கும்.
தேசிய சாதனை கணக்கெடுப்பு 2021-ல், 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 733 மாவட்டங்களில் சுமார் 1.23 லட்சம் பள்ளிகளைச் சேர்ந்த 38 லட்சம் மாணவர்கள் உள்ளடங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. கணிதம், மாநில மொழிப்பாடம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் ஆங்கில பாலத்தில் இந்த தேசிய சாதனை கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்த தேர்வு அசாமி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, கனடா, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, மிசோ, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, போடோ, கரோ, காசி, கொங்கனி, நோபாளி, புதியா மற்றும் லெப்சா ஆகிய மொழிகளில் நடத்தப்படும்.
தேசிய சாதனை கணக்கெடுப்பை சுமூகமாக நடத்துவதற்கு, 1,82,488 கள பரிசோதகர்கள், 1,23,729 கண்காணிப்பாளர்கள், 733 மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்ட சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய சாதனை கணக்கெடுப்பை(என்ஏஎஸ்) நடத்துவதற்கு சிபிஎஸ்இ தலைவர் தலைமையில் தேசிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. என்ஏஎஸ் 2021-ஐ சுமூகமாக நடத்த https://nas.education.gov.in என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி அளவிலான மாநில மற்றும் மாவட்ட மதிப்பெண் முடிவுகள் இந்த இணையளத்தில் வெளியிடப்படும் என மத்திய கல்வியமைச்சகம் தெரிவித்துள்ளது
Dear all
10 November 2021
3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களின் திறன் மதிப்பிடு: தேசிய சாதனை கணக்கெடுப்பு
Tags
PAPER NEWS#
Share This
About www.kalvitamilnadu.com
PAPER NEWS
Labels:
PAPER NEWS
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE