தென்னாப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஒமைக்ரான் வகை தொற்று பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், அந்த வகை பாதிப்புகளை 3 மணி நேரத்திலேயே கண்டறியக் கூடிய, தக்பாத் (TAQPATH) எனப்படும் டெஸ்ட் கிட் மூலமான பரிசோதனையை, தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒமைக்ரான் பரவலை தடுக்கும் நோக்கில், சர்வதேச விமான நிலையங்கள் அமைந்துள்ள, சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய நகரங்களில், மொத்தம் 12 அரசு ஆய்வகங்களில் இந்த வகை பரிசோதனை தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளின் மரபணுவில் ஏதேனும் மாற்றம் உள்ளதா, குறிப்பிட்ட பகுதிகளில் அதிக அளவிலான மக்களுக்கு தொற்று உள்ளதா எனவும் கண்காணிக்கப்பட உள்ளது.

புதிதாக பரவத் தொடங்கியுள்ள ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றை, மரபணு பகுப்பாய்வு முறையில் கண்டறிய வழக்கமாக 7 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பால் பரிந்துரைக்கப்பட்டுள்ள TAQPATH எனப்படும் எனப்படும் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனையை மேற்கொண்டால், 3 மணி நேரத்திலேயே மரபணுவில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய முடியும். அதன் அடிப்படையில், உடனடியாக பாதிக்கப்பட்ட நபரை தனிமைப்படுத்தி, விரைந்து உரிய சிகிச்சைகைகளை மேற்கொள்ள முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ் நாட்டில் ஒரு லட்சத்து 252 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 26 ஆயிரத்து 197 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்ததால், மரணம் அடைந்தோரின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 472 ஆக உயர்ந்துள்ளது.
24 மணி நேரத்தில் நோய் தொற்றில் இருந்து 767 பேர் மீண்டதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 26 லட்சத்து 81 ஆயிரத்து 434 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எட்டாயிரத்து 291 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டங்களை பொறுத்தவரை அதிகபட்சமாக கோவையில் 106 பேருக்கும், சென்னையில் 105 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஈரோட்டில் 70 பேரும், திருப்பூரில் 62 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 51 பேருக்கும், சேலத்தில் 49 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 3 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE