
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக சுமார் இரண்டு ஆண்டுகள் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடக்கவில்லை. ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டன.
இந்த நிலையில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை கடந்த செப்டம்பர் 1-ந் தேதியும், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கடந்த 1-ந் தேதியும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வந்தன.
தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு தொடர்ச்சியாக வகுப்புகளை நடத்த இயலாததால், மாணவர்களுக்கு பாடங்களை முழுமையாக நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நிகழ் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வுகளை மார்ச், ஏப்ரல், மாதங்களில் நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை அரசு தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் மாணவர்களுக்கு உரிய பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப்போதுமான கால அவகாசம் இல்லை என கூறப்படுகிறது.
எனவே மாணவர்கள் 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 பொது தேர்வுக்கு தயாராவதற்கு வசதியாக 2 மாதங்கள் தள்ளிவைத்து பொதுத் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு பதிலாக மே மாதம் முதல் வாரத்தில் பொதுத் தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE