நகைகளை எஸ்பிஐ கோல்டு டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் முதிர்வுக்கு பிறகு தங்கமாகவும் அல்லது பணமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்வோம் வாருங்கள். எஸ்பிஐயில் இருக்கும் இந்த கோல்டு டெபாசிட் திட்டம் R-GDS ஆகும். இந்த திட்டத்தில் நகைகளுக்கு முழு பாதுகாப்பு மற்றும் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. தங்கத்தை வாங்கி விட்டு அது சும்மா பீரோவில் தூங்குவதற்கு பதிலாக வங்கியில் டெபாசிட் செய்தால் நல்ல வட்டி லாபம் கிடைக்கும்.
இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால் தாராளமாக செய்யலாம். இந்திய குடிமகன்கள் யார் வேண்டுமானலும் இணைந்து கொள்ளலாம். என்ஆர்ஐகள் மட்டும் டெபாசிட் செய்ய முடியாது. தனி நபர்கள், நிறுவனங்கள் மூலமாகவும், கூட்டு நிறுவனங்கள் மூலமாகவும் டெபாசிட் செய்து கொள்ள அனுமதி உண்டு. குறைந்தபட்சம் 10 கிராம் முதல் டெபாசிட் செய்து கொள்ளலாம். அதிகபட்சம் டெபாசிட் என்பது வரம்பு இல்லை. வீட்டில் சும்மா இருக்கும் நகைகள் அல்லது தேவைக்கு அதிகமாக இருக்கும் நகைகளை இப்படி டெபாசிட் செய்யதால் நல்ல லாபம்.
தங்க காயின், ஆபரண நகை எப்படி வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இதில் வழங்கப்படும் வட்டி விவரங்கள் இதோ. 1- 3 வருடங்களான முதலீடு திட்டத்துக்கு அதாவது 1 வருடத்திற்கு 0.50%, 2 வருடத்திற்கு 0.55% வட்டி 3 வருடத்திற்கு 0.60% வட்டி வழங்கப்படுகிறது. 5 - 7 வருடங்களுக்கு வட்டி விகிதம் என்பது வருடத்திற்கு 2.25% ஆகும். 12- 15 வருடங்கள் திட்டத்துக்கு தங்கத்தினை டெபாசிட் செய்கிறீர்கள் எனில் வருடத்திற்கு 2.50% வட்டி ஆகும். இந்த 3 திட்டங்களிலும் முதிர்வுக்கு பிறகு தங்கமாகவும் அல்லது பணமாக பெற்றுக் கொள்ளலாம். தங்கமாக திரும்ப பெறும்போது 0.20% கட்டணமாக வசூலிக்கப்படும்.
இந்த திட்டத்தில் இருக்கும் மைனஸ் என்றால் நீங்கள் தங்க நகையாக முதலீடு செய்யும் போது திரும்ப உங்களுக்கு நகையாக கிடைக்காது தங்க கட்டி,தங்க நாணயம் அல்லது பணமாக தான் கிடைக்கும். இதை மற்றும் சற்றும் யோசித்து இந்த திட்டத்தில் முதலீடு செய்வது குறித்து முடிவு எடுங்கள். இதுவே பழைய நகைகளை கொண்டிருப்பவர்கள் இப்படி முதலீடு செய்து பணத்தை பெற்று புது நகையாக வாங்கி கொள்ளலாம்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE