தமிழகத்தில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இது தொடர்பாக முதன்மை கல்வி அதிகாரிகளுடன் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நேற்று சென்னையில் ஆலோசனை நடத்தினர்.இதில் பங்கேற்ற பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி: நவ., 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும் முழு நாளும் பள்ளிகள் நடக்கும். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.அச்சப்படும் மாணவர்களை பள்ளிகளில் விட்டு விட்டு வளாகத்தில் பெற்றோர் காத்திருக்கலாம். விருப்பமான நேரத்தில் மாணவர்களை அழைத்து செல்லலாம். கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.
பள்ளிகள் திறந்ததும் காலாண்டு அரையாண்டு தேர்வுக்கு பதில் டிசம்பரில் அனைத்து பாடங்களுக்கும் சேர்த்து தேர்வு நடத்தப்படும். அதன்பின் வழக்கமான முறைப்படி ஆண்டு தேர்வு, பொதுத்தேர்வு நடத்தப்படும், என்றார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE