நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை நவம்பர் இறுதியில் அறிவிக்க, மாநில தேர்தல் ஆணையம் முடிவெடுத்து உள்ளது.அனைத்து மாவட்டங்களிலும், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. மாநிலம் முழுதும் 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் இருந்தன. இவற்றில் மொத்தமாக 12 ஆயிரத்து 820 வார்டுகள் இருந்தன. இந்நிலையில், தாம்பரம், காஞ்சிபுரம், கடலுார், கரூர், கும்பகோணம், சிவகாசி ஆகிய ஐந்து மாநகராட்சிகள் புதிதாக உதயமாகி உள்ளன.
இதனால், மாநகராட்சிகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, பொன்னேரி, திருநின்றவூர், சோளிங்கர், குன்றத்துார், நந்திவரம் - கூடுவாஞ்சேரி, மாங்காடு, திட்டக்குடி, பள்ளப்பட்டி உள்ளிட்ட 28 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன.இதன் வாயிலாக, நகராட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து, பேரூராட்சிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் மாநகராட்சி, நகராட்சிகளில் வார்டுகளை வரையறை செய்யும் பணி வேகமாக நடந்து வருகிறது. மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், செயலர் சுந்தரவல்லி உள்ளிட்ட அதிகாரிகள், மாவட்ட வாரியாக தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
நவம்பர் 27ம் தேதி வரை ஆலோசனை கூட்டத்திற்கு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. வடகிழக்கு பருவ மழை காலம் என்பதால், நவம்பர் இறுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, டிச., மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது
Dear all
30 October 2021
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நவ., இறுதியில் அறிவிப்பு
Tags
PAPER NEWS#
Share This
About www.kalvitamilnadu.com
PAPER NEWS
Labels:
PAPER NEWS
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE