சென்னை: தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் 14 மற்றும் 15 தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சனிக்கிழமையும் (அக்டோபர் 16) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு பிறகு பள்ளிகள் திறப்பா?.. முதல்வர் சொன்னது இதுதான்.. அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் இன்று தொடங்கி அடுத்த இரண்டு நாட்கள் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை காரணமாக அரசு விடுமுறை ஆகும். அதேநேரம் ஏற்கனவே பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பின் படி, சனிக்கிழமை, அரசுப் பள்ளிகளுக்கு வேலை நாளாக இருந்தது.
இந்தச் சூழலில் வரும் 16ம் தேதி, சனிக்கிழமையையும் அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறையாக அறிவிக்க வேண்டுமென, ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த கோரிக்கையை ஏற்று வரும் 16ம் தேதி சனிக்கிழமை அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பல்வேறு ஆசிரியர் சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் வாரத்தில் 6 நாட்கள் செயல்பட்டு வருவதாகவும் மாணவர்கள் விடுப்பின்றி பள்ளிக்கு வருகை புரிகின்றனர் என்றும், கணிசமான ஆசிரியர்கள் தங்களது சொந்த மாவட்டங்களிலிருந்து தொலைதூரத்தில் பணிபுரிந்து வருகின்றனர் என்றும், அக். 14 மற்றும் 15 ஆகிய இரு நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் வார இறுதி நாளான சனிக்கிழமை அக்.16 அன்று விடுமுறை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி அக். 16 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக, பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் வரும் அக். 16 அரசு விடுமுறை நாளாக அறிவித்து உயர்க்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை என்பதால் வெளி மாவட்டங்களில் தங்கிப் படித்து வரும் மாணவ, மாணவிகள் சொந்த ஊர்களுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர்.

No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE