பழைய ஸ்மார்ட் போன்களில், வரும் நவம்பர் 1 முதல், வாட்ஸ் அப் செயலி இயங்காது
பழைய ஸ்மார்ட் போன்களில், வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல், வாட்ஸ் அப் செயலி இயங்காது என, அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உட்பட உலகம் முழுவதும் கோடிக் கணக்கானோர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி, தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுகிறது. தற்போது வாட்ஸ் அப் செயலியை, பேஸ்புக் நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல், பழைய ஸ்மார்ட் போன்களில், வாட்ஸ் அப் செயலி செயல்படாது என அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, ஆண்ட்ராய்டு ஓ.எஸ்., 4.1 மற்றும் அதற்கு மேல், ஐ.ஓ.எஸ்., 10 மற்றும் அதற்கு மேல் உள்ள ஸ்மார்ட் போன்களில் மட்டுமே வாட்ஸ் அப் செயலி செயல்படும். லேட்டஸ்ட் வெர்ஷன்களை ஆதரிக்கும் ஸ்மார்ட் போன்களில் மட்டுமே வாட்ஸ் அப் செயலியை இனி பயன்படுத்த முடியும்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE