18 முதல் 21 வயதுவரை உள்ளவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆன்லைன் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது தொடர்பாக இளைஞர்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால் இளைஞர்கள் குறைந்த அளவிலேயே வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர். எனவே, இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் ஆன்லைன் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத 18 முதல் 21 வயதுவரை உள்ள இளைஞர்கள் WWW.elections.tn.gov.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதில் படிவம் 6 மூலம் பெயர் சேர்க்கலாம். வயதுக்கான ஆதாரமாக ஆதார் அட்டை, கல்லூரி அடையாள அட்டை, வயதுடன்கூடிய வேறு ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவேண்டும். கல்லூரி விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் அவர்களின் பூர்வீக முகவரியில் பெயர் சேர்க்கும் வகையில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும்.
கல்லூரி விடுதி முகவரியில் பெயர்சேர்க்கக்கூடாது. மேலும் ஸ்மார்ட் போன் மூலம் பிளே ஸ்டோரில் TN Elections பதிவிறக்கம் செய்து அதன் மூலம் எந்தவித கட்டணமுமின்றி வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்க விண்ணப்பம் செய்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் வீட்டில் இருந்தபடியே எந்தவித கட்டணமுமின்றி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE