வீட்டுக் கடன் வட்டி குறைப்பு
ஏனெனில் அந்த அளவிற்கு வரலாறு காணாத அளவு வட்டி விகிதமானது குறைந்துள்ளது. இது வீடுகட்ட அல்லது வாங்க மிகச் சரியான நேரம் என்றே கூறலாம். அந்த வகையில் தற்போது பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை ஐந்து அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது.
வட்டி விகிதம் எவ்வளவு?
வட்டி குறைப்பின் மத்தியில் தற்போதைய வட்டி விகிதம் வருடத்திற்கு 6.7 சதவீதம் ஆகும். இது சம்பளதாரர்கள் மற்றும் சுய தொழில் செய்பவர்கள் என அனைவருக்கும் இந்த வட்டி விகிதம் பொருந்தும் என இந்த நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது உண்மையில் இது வீட்டுக் கடன் வாங்க சரியான நேரம் எனலாம்
டிரான்ஸ்பருக்கும் பொருந்தும்
எனினும் இந்த வட்டி விகிதமானது வாடிக்கையாளரின் கிரெடிட் ஸ்கோர், அவர்களின் வருமானம் மற்றும் வேலை உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வீட்டுக் கடன் வாங்கியிருக்கும் வாடிக்கையாளர்களும், அவர்களின் வீட்டுக் கடனை பஜாஜ் ஹவுஸிங் பைனான்ஸூக்கு டிரான்ஸ்பர் செய்து கொள்ளலாம். அவர்களுக்கும் இந்த வட்டி விகிதம் பொருந்தும் என்றும் அறிவித்துள்ளது.
தவணை தொகை குறையும்
இதன் மூலம் வீட்டுக்கடன் வாடிக்கையாளர்கள் கணிசமான தொகையை சேமிக்க முடியும் ஏனெனில் மாதாமாதம் செலுத்தும் மாதத் தவணை தொகையானது வட்டி விகிதம் குறைவதால் தொகையும் குறையலாம் என்பது மிக நல்ல விஷயமே.
டாப் அப் கடனும் பெற்றுக் கொள்ளலாம் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இணையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
மேலும் வாடிக்கையாளர்கள் முழுக்க முழுக்க இணையம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தொடர்பு இல்லாத கடன்களை வழங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏனெனில் இதன் முழு செயல்முறையும் கிட்டத்தட்ட அனைத்து செயல்முறையும் ஆன்லைனிலேயே முடிந்து விடும். இது உங்களது மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் வழியாக நிறைவு செய்யப்படுகிறது.
இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்து
நீங்கள் இந்த சலுகையைப் பெற தகுதியானவர் தான் எனில், நீங்கள் எங்கும் பஜாஜ் பைனான்ஸ்-ன் பிரதிநிதியை நேரில் சந்திக்கலாம். அதுவும் நீங்கள் இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டிய சூழ்நிலையில் மட்டுமே இருக்கும். பிற பதிவு முறைகள் அனைத்துமே இணையதளம் மூலமாகவே மேற்கொள்ளலாம்.
இது தான் சரியான நேரம்
எனினும் இதனை பெற நல்ல கடன் பரிவர்த்தனைகள் மற்றும் வருமானம், நல்ல வேலைவாய்ப்பு உள்ள விண்ணப்பதாரர்கள் ஐந்து கோடி ரூபாய் அல்லது அதற்கு மேலாக தகுதியுள்ளவர்கள் கடன் வகை பெற்றுக் கொள்ளலாம் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்னும் இதனை தெளிவாகக் கூற வேண்டுமெனில், கடன் தொகை அளவு என்பது பெரும் பிரச்சனையாக இங்கு இல்லை. ஆக குறைவான வட்டியில் கடன் பெற்று பெரிய அளவில் கடன் பெற்று, உங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள இது ஒரு சரியான வாய்ப்பு என்று கூறலாம்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE