தமிழக பள்ளி கல்வி துறையில், 38 வருவாய் மாவட்டங்களுடன், 128 கல்வி மாவட்டங்கள் வாயிலாக நிர்வாக பணிகள் நடக்கின்றன. இதில், வருவாய் மாவட்ட அளவில், சி.இ.ஓ.க்கள் என்ற மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும், மாவட்ட அளவில் டி.இ.ஓ.,க்கள் என்ற மாவட்ட கல்வி அதிகாரிகளும் உள்ளனர்.இவர்களுக்கு பணி மாறுதல் என்பது நிர்வாக ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்தாண்டு, ஆசிரியர்களை போன்று விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங்கை, பள்ளி கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது.நிர்வாக பதவிகளுக்கு, இதுபோன்ற கவுன்சிலிங் முறையை அறிமுகம் செய்தால், அதிகாரிகள் தங்கள் சொந்த ஊர்கள் உள்ள மாவட்டங்கள் மற்றும் பகுதிகளுக்கு மாறுதல் பெற்று செல்ல வாய்ப்புள்ளதாக சர்ச்சை எழுந்தது.
இதுகுறித்து, நம் நாளிதழிலும் செய்திகள்வெளியாகின. இந்நிலையில், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான கவுன்சிலிங்கில், புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, டி.இ.ஓ.,க்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கோ அல்லது சொந்த ஊர் உள்ள மாவட்டங்களுக்கோ, இடங்களை தேர்வு செய்ய தடை விதித்து, பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
டி.இ.ஓ., மற்றும் அதற்கு இணையான பதவியில், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் இடங்களுக்கும், மாறுதல் கேட்க முடியாது. இதன்படி, இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE