Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

14 October 2021

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாட, சுவாமி வழிபாடு செய்ய நல்ல நேரம்

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜய தசமி 2021 தேதி மற்றும் பூஜைக்கான நேரம் எப்போது?


எல்லா கோயில்களிலும் நவராத்திரி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த பண்டிகையில் கடைசியில் வரக்கூடிய ஆயுத பூஜை எனும் சரஸ்வதி பூஜை, விஜயதசமி பூஜை எப்போது, ஆயுதப் பூஜைக்கான சுப நேரங்கள் என்ன என்பதை பார்ப்போம்.நவராத்திரியின் முக்கியத்துவமே மகிஷாசுரனை முப்பெரும் தேவியர் சேர்ந்து ஒரு உருவமாகி விரதமிருந்து அழிப்பது தான். அதோடு மனித வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கற்றுத் தருவதாக அமைந்துள்ளது.

எல்லா கோயில்களிலும் நவராத்திரி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த பண்டிகையில் கடைசியில் வரக்கூடிய ஆயுத பூஜை எனும் சரஸ்வதி பூஜை, விஜயதசமி பூஜை எப்போது, ஆயுதப் பூஜைக்கான சுப நேரங்கள் என்ன என்பதை பார்ப்போம்.


நவராத்திரியின் முக்கியத்துவமே மகிஷாசுரனை முப்பெரும் தேவியர் சேர்ந்து ஒரு உருவமாகி விரதமிருந்து அழிப்பது தான். அதோடு மனித வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கற்றுத் தருவதாக அமைந்துள்ளது.
மகிஷாசுர வரம் மற்றும் வதம்:

நவராத்திரி :

ஒவ்வொரு மாதமும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளய அமாவாசை தினத்திற்கு மறுநாளிலிருந்து தட்சணாயன காலத்தில் 9 நாட்கள் தேவியை நினைத்து விரதமிருந்து வழிபட்டு பூஜிக்க மிகசிறந்த காலமாகும்.

மகிஷாசுர வதம்:

பலம் பொருந்திய தன்னை ஒரு ஆண் மகன் கொல்வே முடியாது, அதனால் ஒரு பெண் தன்னை எப்படி கொல்ல முடியும் என நினைத்த மகிஷாசுரன், தன்னை 9 நாட்கள் விரதமிருந்து வலுவில்லாமல் இருக்கும் ஒரு பெண் தான் தன்னை கொல்ல முடிய வேண்டும் என்ற வரத்தை வாங்கினான் மகிஷாசுரன்.

வரத்தை பெற்ற அரக்கன் மண்ணுலகையும், விண்ணுலகையும் தன் கொடுமைகளாலும், அசுர படைகளாலும் அடிமைப்படுத்தினான்.

மிகிஷனை கொல்வது ஒரு சாதாரண பெண்ணால் முடியாது என்பதால், முப்பெரும் தேவியர்கள் ஒன்றாக சேர்ந்து இச்சை - விருப்பம், ஞானம்- அறிவு, கிரியா - செய்தல், ஆக்கல் எனும் சக்திகளாக அதாவது இச்சா சக்தி,கிரியா சக்தி, ஞான சக்தி இணைந்து துர்க்கை அம்மனாக விரதமிருந்து, மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போரிட்டார்.

விஜய தசமி

ஒன்பதாம் நாளான நவமி திதியில் மகிஷாசுரனை வதம் செய்து வெற்றி அடைந்ததைப் போற்றும் விதமாக விஜய தசமி தினம் கொண்டாடப்படுவதாகப் புராணக்கதைகள் கூறுகின்றன. இந்த போருக்காக துர்க்கை ஆயுதங்களைப் பூஜித்ததை கொண்டாடும் விதமாகவும். பொதுமக்கள் தன் தொழிலுக்கான மூல ஆயுதமாக இருக்கும் பொருட்களை பூஜிக்கும் நாளாக ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி மட்டுமில்லாமல், ஆயுத பூஜை, விஜய தசமி உள்ளிட்டவையும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகின்றன.

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை எப்போது?


பிலவ வருடம் புரட்டாசி மாதம் 28ம் தேதி (அக்டோபர் 14) நவமி திதியில் துர்க்கை அன்னை போருக்காக தன் ஆயுதங்களை பூஜித்த ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சரஸ்வதி பூஜை என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது.

நம் வாழ்வாதாரத்திற்காக நாம் பயன்படுத்தக்கூடிய தொழில் செய்வதற்கான பொருட்களை, உபகரணங்களைப் பூஜிப்பது வழக்கம்.

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாட, சுவாமி வழிபாடு செய்ய நல்ல நேரம்

14 அக்டோபர் 2021 (புரட்டாசி 28) வியாழக் கிழமை

காலை 6 மணி முதல் 7 மணி வரை (குரு ஹோரை) - சரஸ்வதி பூஜை மட்டும்

காலை 9 மணி முதல் 12 மணி வரை (சுக்ர ஹோரை, புதன் ஹோரை, சந்திர ஹோரை) - ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை

பகல் 1 மணி முதல் 2 மணி வரை (குரு ஹோரை) - சரஸ்வதி பூஜை

பிற்பகல் 4 மணி முதல் 6 மணி வரை (சுக்ர ஹோரை, புதன் ஹோரை) - ஆயுத பூஜை மட்டும்

இரவு 9 மணி முதல் 11 மணி வரை (சுக்ர ஹோரை, புதன் ஹோரை) - ஆயுத பூஜை மட்டும்

பூஜைக்கு தவிர்க்க வேண்டிய நேரம்

வியாழன் மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை எமகண்டம்

மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை இராகு காலம்

இந்த நேரங்களில் சுவாமி வழிபாடு செய்வதை தவிர்ப்பது சுபம் தரும்.

விஜய தசமி எப்போது?


மகிஷாசுரனை கொன்று மண்ணுலக, விண்ணுலகத்தினருக்கு விடுதலை வாங்கி தந்த அன்னையின் வெற்றியை கொண்டாடும் விதமாக விஜயதசமி என்ற அற்புத நாள் கொண்டாடப்படுகிறது.

இது புரட்டாசி மாதம் 29ம் தேதி தசமி திதியில் (அக்டோபர் 15) விஜயதசமி கடைப்பிடிக்கப்படுகிறது.

விஜயதசமி (கொலு எடுக்க காலை 10.00 - 11.00 மணி)


விரத காலங்களில் பாட வேண்டிய அம்மன் பாடல்

தேவி மகாத்மியம்

துர்கா அஷ்டகம்

இலட்சுமி தோத்திரம் (கனகதாரா தோத்திரம்)

சகலகலாவல்லி மாலை

சரஸ்வதி அந்தாதி

மஹிஷாசுரமர்த்தினி தோத்திரம்

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்




No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES