ஹைலைட்ஸ்:
நெருங்கும் அமேசான் விற்பனை
ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகள் அறிவிப்பு
இந்த் சிறப்பு விற்பனை ஒரு மாதம் நடக்கும்
கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 விற்பனை வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் எந்தெந்த நிறுவனங்களின் என்னென்ன தயாரிப்புகள் மீது என்னென்ன சலுகைகள், தள்ளுபடிகள் கிடைக்கும் என்கிற விவரங்களை அமேசான் தளம் வெளிப்படுத்திய வண்ணம் உள்ளது.
அமேசானின் இந்த ஒரு மாத கால பண்டிகை விற்பனையானது ஆப்பிள், ஹெச்பி, லெனோவா, ஒன்பிளஸ், சாம்சங், சோனி மற்றும் சியோமி போன்ற பிராண்டுகளிலிருந்து எக்ஸ்சேஞ்ச் சலுகைகள், நோ காஸ்ட் இஎம்ஐ சலுகைகள் மற்றும் பலவற்ற்றை வழங்க உள்ளது.
அமேசானில் உள்ள ஒரு லேண்டிங் பக்கத்தின்படி, ஆப்பிள், சாம்சங், விவோ, ஒன்பிளஸ், ரெட்மி, விவோ, டெக்னோ மற்றும் பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் தள்ளுபடி விலையில் வாங்குவதற்கு கிடைக்கும்.
விவோ வி21இ 5ஜி ரூ.24,990-க்கும், விவோ ஒய்73 ஆனது ரூ.20,990 க்கும் மற்றும் விவோ X60 ப்ரோ ரூ.49,990 க்கும் வாங்க கிடைக்கும்.
இதேபோல், சாம்சங் கேலக்ஸி நோட் 20 மாடலை ரூ.44,999 க்கு வாங்க முடியும், மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865+ SoC உடனான சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி மாடலை ரூ.69,999 க்கு வாங்கலாம்.
கூடுதலாக, அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 விற்பனையின் போது சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 5ஜி மீது "ஆண்டின் மிகப்பெரிய டீல்" அறிவிக்கப்பட்டுள்ளது.
டெக்னோ ஸ்பார்க் 7T, தற்போது ரூ.9,499 க்கு வாங்க கிடைக்கும். ஆனால் சிறப்பு விற்பனையின் போது ரூ.8,499 க்கு பட்டியலிடப்படும். இதேபோல் டெக்னோ ஸ்பார்க் 8, டெக்னோ பாப் 5 பி மற்றும் டெக்னோ போவா போன்ற பிற டெக்னோ ஸ்மார்ட்போன்களின் மீதும் சலுகைகள் கிடைக்கும்.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி 9A மாடல் தற்போது ரூ.6,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவலின் போது ரூ.6,799 க்கு விற்பனை செய்யப்படும்.
மேலும், செப்டம்பர் 30 ஐக்யூ போன்களின் மீது மெகா ஒப்பந்தம் வெளிப்படுத்தப்படும். பின்னர் அக்டோபர் 1 ஆம் தேதி, ஒப்போ ஒரு ஏ-சீரிஸ் போனை அறிமுகப்படுத்தும், மேலும் அமேசான் சியோமி ஸ்மார்ட்போன்களில் ஒரு மெகா ஒப்பந்தத்தையும் வெளிப்படுத்தும். அதேபோல சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 5 ஜி மீதான சலுகை விலையையும் அறிவிக்கும்.
ஒன்பிளஸ் மற்றும் ஆப்பிள் மாடல்கள் மீதான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் பற்றிய தகவல்களும் விரைவில் அறிவிக்கப்படும்.
ஸ்மார்ட்போன்களை தவிர்த்து, அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 விற்பனையின் போது, லேப்டாப்கள் மீது 50 சதவிகிதம் வரை, ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்களில் 80 சதவிகிதம் வரை, ஸ்மார்ட்வாட்ச்களில் 60 சதவிகிதம் வரை, டேப்லெட்டுகளில் 45 சதவிகிதம் மற்றும் கேமராவில் 60% வரை தள்ளுபடி கிடைக்கும் என்று இந்த இ-காமர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் டிஸ்ப்ளேக்கள், ஃபயர் டிவி ஸ்ட்ரீமிங் ஸ்டிக்ஸ் மற்றும் கின்டெல் போன்ற அமேசான் தயாரிப்புகளின் மீதும் ஒப்பந்தங்கள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கும்.
மேலும் இந்த விற்பனையின் போது கிடைக்கும் டீல்கள் மற்றும் தள்ளுபடிகளுக்கு அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே அணுகல் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் அமேசான் நிறுவனத்தின் போட்டியாளரான பிளிப்கார்ட் வருகிற அக்டோபர் 3 முதல் அதன் பிக் பில்லியன் டேஸ் 2021 விற்பனையை நடத்துவதாக அறிவித்துள்ளது
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE