நவம்பர் 1-ம் தேதி(நாளை) முதல் வங்கி, சமையல் சிலிண்டர், பென்ஷன்தாரர்கள் பிரிவில் மாற்றங்கள் நடைமுறைக்கு வர இருக்கின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியும், 15-ம் தேதியும் சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படும்.
அந்த வகையில் நாளை சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் கடந்த 15நாட்களாக அதிகரித்ததால் நாளை சிலிண்டர் விலை உயரும் என எதிர்பார்க்கலாம்.
சிலிண்டர் முன்பதிவில் புதிய முறை
சிலிண்டர் முன்பதிவில் புதிய முறை
வீடுகளில் சமையல் செய்யப்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்யும்போது இனிமேல் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு ஓடிபி எண் வரும். அந்த ஓடிபி எண்ணை, சிலிண்டர் டெலிவரி செய்ய வீட்டுக்கு வரும் ஊழியரிடம் தெரிவித்தால்தான் சிலிண்டர் வழங்கப்படும். சிலிண்டர் சரியான நபருக்கு சென்று சேர்கிறதா என்பதை உறுதி செய்ய இந்த முறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.
ரயில்நேரம் புதிய அட்டவணை
நவம்பர் 1-ம் தேதி முதல் இந்திய ரயில்வேயில் பல்வேறு ரயில்களின் புறப்படும் நேரம், சென்றடையும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு புதிய அட்டவணை அமலுக்கு வருகிறது. இதற்கு முன் கடந்த 1ம் தேதி அமலுக்குவருவதாகக் கூறப்பட்டு 31ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு, இறுதியாக நவம்பர் 1ம்தேதி முதல் புதிய ரயில் அட்டவணை நடைமுறைக்கு வருகிறது. 13ஆயிரம் பயணிகள் ரயில், 6ஆயிரத்துக்கும் மேற்பட்ட சரக்கு ரயில்அட்டவணையில் மாற்றம் வருகிறது
பரோடா வங்கி புதிய விதிமுறை
பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் வாடிக்கையாளர்கள் நவம்பர் 1ம் தேதிமுதல் தங்கள் வங்கிக்கணக்கில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்யவும், எடுக்கவும் குறைந்தபட்ச கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விதி அமலுக்கு வருகிறது. அதாவது வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்கில் பணம் டெபாசிட் செய்தாலும் சேவைக்கட்டணம், பணம் எடுத்தாலும் சேவைக்கட்டணம் என்ற நடைமுறை அமலுக்கு வருகிறது. இதே முடிவை பேங்க் ஆஃப் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆகியவையும் விைரவில் எடுக்கக்கூடும்.
ஓய்வூதியதாரர்களுக்கு நிம்மதி
ஓய்வூதியம் பெறுவோருக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி புதிய வசதியை நவம்பர் 1-ம்தேதி முதல் அமலுக்கு கொண்டு வருகிறது. இதன்படி, ஓய்வூதியதாரர்கள் லைஃப் சான்றிதழை வழங்க நேரடியாக வங்கிக்குச் செல்லத் தேவையில்லை. வீடியோ கால் செய்து தங்கள் இருப்பை ஓய்வூதியதார்கள் தெரிவிக்க முடியும்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE