மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைப்படி, தமிழகத்தில், 'இல்லம் தேடி கல்வி திட்டம்' என்ற டியூஷன் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தன்னார்வலர்களாக தமிழகத்தில் உள்ள பட்டதாரிகள் யார் வேண்டுமானாலும் சேரலாம். இதில், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் கொள்கைக்கு எதிரானவர்கள் நுழைந்து விட வாய்ப்புள்ளதாக, கூட்டணி கட்சியினர் தரப்பில் தி.மு.க.,வுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை பள்ளி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி: இல்லம் தேடி கல்வி திட்டத்தில் எந்தவித தவறும் நடந்து விடாமல், முழு கண்காணிப்புடன் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். தனியார் நிறுவனங்களின் பின்னணி தெரிந்த பிறகே, அவர்களுக்கு அனுமதி அளிப்போம். தன்னார்வ பணிக்கு வேறு கொள்கை கொண்டவர்களை அனுமதிக்காமல், எச்சரிக்கையாக இருப்போம். பள்ளிகளில் நடத்தப்பட்ட பாடம் போல அல்லாமல், வித்தியாசமாக மாலை நேரத்தில் கல்வி கற்பிக்கப்படும். இதற்காக கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால், மாணவர்கள் பள்ளிப் படிப்பை கைவிட வாய்ப்பில்லை.
வரும் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்; முழு நாளும் வகுப்புகள் நடக்கும். மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் என கூறவில்லை. ஆனால், ஒவ்வொரு மாணவரும் அன்றாட வாழ்வில், நமக்கு ஒழுங்குமுறை வேண்டும் என்பதற்காக பள்ளிக்கு வர வேண்டும் என விரும்புகிறோம். கொரோனா பிரச்னை தொடர்பாக, சுகாதாரத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல் பின்பற்றப்படும். பள்ளிகளில் கழிவறைகள் சுத்தமாக இல்லாவிட்டால், பெற்றோர் புகார் அளிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE