தமிழகத்தில், புதிதாக அரசு மருத்துவ கல்லுாரிகளில் 1,450 மாணவர்களை சேர்க்க, மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது,'' என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் கட்டப்பட்டு வரும் விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரிகளில், தலா 150 மாணவர்கள்; ராமநாதபுரம், திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரிகளில், தலா 100 மாணவர் என, 850 மாணவர்களை சேர்க்க மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது.
அதன் தொடர்ச்சியாக, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாகப்பட்டினம், அரியலுார் மாவட்ட மருத்துவக்கல்லுாரிகளில் தலா 150 மாணவர்கள் என, 600 பேரை சேர்க்க, புதிதாக ஒப்புதல் கிடைத்துள்ளது. இதையடுத்து, 1,450 மாணவர்களை இந்தாண்டில் சேர்க்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.புதிய இடங்களையும் சேர்த்து, தமிழகத்தில் 9,100 மாணவ - மாணவியர் மருத்துவம் படிக்க முடியும்.இவ்வாறு அவர்கூறினார்.
Dear all
30 October 2021
புதிதாக 1,450 மாணவர்கள் மருத்துவம் படிக்க வாய்ப்பு
Tags
PAPER NEWS#
Share This
About www.kalvitamilnadu.com
PAPER NEWS
Labels:
PAPER NEWS
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE