இடைநிற்றல்:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் கோரத்தாண்டவம் ஆடியது. இதன் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் பல்வேறு காரணங்களுக்காக நிகழ்ந்து வரும் நிலையில் கொரோனா காலத்தில் வழக்கத்தை விட இந்த எண்ணிக்கை அதிகரித்தது. இந்நிலையில் பள்ளிக்கு வராத மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல், தொடர்ச்சியாக 15 முதல் 30 நாட்கள் பள்ளிக்கு வராமல் இருக்கும் மாணவர்கள் பட்டியலிடப்பட்டனர்.
அவ்வாறு பட்டியலிடப்பட்ட 2 லட்சம் மாணவர்களின் முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டது. இடைநிற்றலை தடுத்திடும் வகையில் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் பணியில் 40 ஆயிரம் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளை சேர்ந்த ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மாணவர்களை கண்டறிந்து பெற்றோர்களுடன் கலந்தாலோசித்து 1 லட்சத்து 28 ஆயிரத்து 581 மாணவ, மாணவியர் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.
திருவள்ளூர், கிருஷ்ணகிரி மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் 28,000 ஆக இருந்த மாணவர்களின் இடைநிற்றல் எண்ணிக்கை தற்போது 1 லட்சத்து 28,000 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் 74,725 மாணவர்கள், 53,855 மாணவிகள் மற்றும் 1 திருநங்கை என மொத்தம் 1,28,581 மாணவ மாணவிகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சமாக இருக்கும் பட்சத்தில் மீதமுள்ள மாணவர்களை கண்டறியும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE