தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், “ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு. நீலகிரி, சேலம், கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை , புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக் கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் கரூர், ஸ்ரீமுஷ்ணம், சீகூர் ஆகிய பகுதிகளில் 10 செ.மீவரை மழை பதிவாகி உள்ளது.
தெற்கு வங் கக்கடல், மன்னார் வளைகுடா, அந்தமான் கடல் ஆகிய பகுதிகளில் 50 கிலோமீட்டர்வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம்.
அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE