Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

21 October 2021

1000 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை

:தமிழகம் முழுதும் 1,000 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாததால், கற்பித்தல் மற்றும் நிர்வாக பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில், 37 ஆயிரம் அரசு பள்ளிகள் உட்பட 59 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன. இதில், 6,200 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில், ஒவ்வொரு ஆண்டும் பதவி உயர்வு வழியாக, அதிகாரிகளாக செல்லும் ஆசிரியர்களின் காலி இடங்களுக்கு, புதிய நியமனம் அல்லது பதவி உயர்வு வழியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.

இந்த ஆண்டு பதவி உயர்வு, இடமாறுதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இடம் மாறிய தலைமை ஆசிரியர்களின் பணியிடங்கள் இன்னும் நிரப்பாமல் காலியாக உள்ளன.அந்த வகையில், 700 மேல்நிலைப் பள்ளிகள்; 300 உயர்நிலைப் பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள் பணியில் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த இடங்களில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பாடம் நடத்தும் மூத்த ஆசிரியர்களுக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கொரோனா தடுப்பு நடவடிக்கையால் தாமதமாக பள்ளி திறந்ததால், பாடங்களை விரைந்து நடத்த வேண்டிய கட்டாயம், ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.தலைமை ஆசிரியர் இல்லாமல் கூடுதல் பொறுப்பு வழங்கியுள்ளதால், நிர்வாக பணியும் பார்க்க முடியாமல், மாணவர்களுக்கு கற்பித்தல் பணியும் பார்க்க முடியாமல், ஆசிரியர்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

இதன் காரணமாக 1,000 பள்ளிகளில், பொது தேர்வுக்கான மாணவர்களுக்கு கற்பித்தல் குறைந்து, தேர்ச்சி பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.எனவே பள்ளிக்கல்வி அதிகாரிகள், இந்த பிரச்னைக்கு உரிய முடிவெடுத்து, காலியிடங்களை நிரப்புமாறு கோரிக்கை எழுந்துள்ளது.



source 


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES