Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

11 October 2021

தமிழக பல்கலைக்கழகத்தில் அமலுக்கு வந்த 10 சதவீத EWS இடஒதுக்கீடு- தமிழக அரசு அனுமதி அளித்ததா?




அழகப்பா பல்கலைக்கழகம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி பயோடெக்னாலஜி துறையில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு பிரிவில் மாணவி இடம் வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவிகித EWS quota தமிழக உயர்கல்வி நிலையங்களில் ஒதுக்கீடு செய்யப்படாது என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்த நிலையில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் பயோடெக்னாலஜி துறையின் நிதிபங்களிப்போடு நடத்தப்படுகின்ற பயோடெக்னாலஜி படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டில் நிஷா தாண்டா என்கின்ற ஒரு மாணவி சேர்ந்துள்ளார்.

ஆண்டு வருமானம் 8 லட்ச ரூபாய் வரை உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பது மத்திய அரசின் உத்தரவாகும். முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் அமல்படுத்த இதுவரை தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. ஆனால், மத்திய அரசின் இந்த உத்தரவு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வித் திட்டங்களில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்டெக் பாடப்பிரிவில் இந்த தனி இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனையடுத்து, அந்த பாடப்பிரிவு நிறுத்தப்பட்டுவிட்டது.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி பயோடெக்னாலஜி பாடப்பிரிவு, மத்திய அரசின் பயொடெக்னாலஜி துறையின் நிதி உதவியுடன் இயங்கி வருகிறது. இந்த பாடத்திட்டத்தில் உள்ள 10 இடங்களில், ஒரு இடம் பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய பிரிவினருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ’பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கிடையாது என அறிவித்துள்ள நிலையில் EWS பிரிவில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அரசின் அனுமதி இல்லை என்றாலும், முன்னேறிய வகுப்பில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறை தமிழக உயர்கல்வி நிலையங்களில் சத்தமில்லாமல் அமலாகி வருகிறது.


No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES