Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

02 October 2021

திட்டமிட்டப்படி நவம்பர் 1 இல் பள்ளிகள் திறக்கப்படுமா? - அமைச்சர் சொல்வது இதுதான்!

பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு அளித்துள்ள அறிவுரையின் காரணமாக, அனைத்து மாவட்டங்களிலும் நவம்பர் 1 ஆம் தேதி திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

1- 8 ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 1 ஆம் திறப்பு என அரசுஅறிவிப்பு.
மருத்துவக் குழுவின் அறிவுரைப்படி செயல்பட அமைச்சருக்கு முதல்வர் அறிவுறுத்தல்.

பள்ளிகள் திறப்பு மேலும் ஒத்தி போகிறதா என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தியா முழுவதும் காந்தி ஜெயந்தி விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் இன்று காலை திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள உப்பு சத்தியாக்கிரகம் நினைவுத் தூணில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் உருவப்படத்திற்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர்மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து காந்தியின் ஜெயந்தி நாள் மற்றும் 75 வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் மராத்தான் ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தலைமையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'நவம்பர் 1-ஆம் தேதி 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை. திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு மாதிரியான கருத்துக்களை அறிக்கையாக அளித்திருந்தனர். இதை நான் முதல்வரிடம் வழங்கியபோது அவர் சொன்னது ஒன்று தான்.

பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

'இது குழந்தைகள் உடல்நலம் சம்பந்தப்பட்ட விஷயம். மருத்துவக் குழுவினர் என்ன சொல்கிறார்களோ அதை நாம் முழுமையாக கடைப்பிடிப்போம்' என்று கூறினார். பள்ளிகள் திறப்பில் எந்த மாற்றமும் இல்லை' என்று அமைச்சர் கூறினார்.


மாவட்டந்தோறும் கொரோனா நிலவரத்தின் அடிப்படையில், பள்ளிக் கல்வி அதிகாரிகள் அரசுக்கு அறிக்கை அளித்துள்ளதாலும், இதனடிப்படையில் மருத்துவக் குழுவினர் வழங்கும் பரிந்துரையின்படி பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் அமைச்சரிடம் கூறியுள்ளதால், அண்மையில் அரசு அறிவித்தப்படி, அனைத்து மாவட்டங்களிலும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது




No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES