அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர் வருகையை இதே செயலி மூலம் பதிவு செய்கின்றனர்.
கிட்டத்தட்ட 1,50,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் எமிஸ் செயலியை பயன் படுத்துவதால், சர்வர் பிசியால், நாம் ஆசிரியர் வருகையை பதிவு செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.
இதை எளிதாக கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், நேர விரயமின்றி பதிவு செய்யலாம்.
காலை 8 மணியளவில், எமிஸ் செயலியை open செய்து, ஆசிரியர் வருகை மெனுவுக்கு (ஐகான்) செல்ல வேண்டும்.
அன்றைய தினம் ஆசிரியர் எவரேனும் விடுப்பு கேட்டிருப்பின், அவர் பெயருக்கு நேராக உள்ள கலத்தில், உரிய பதிவை தேர்வு செய்து கொள்ளவும்.
மற்றவர்களுக்கு, Default ஆக P இருக்கும்.
இப்போது எமிஸ் செயலியை கைபேசியில், Close செய்யாமல் Minimise செய்ய வேண்டும். அல்லது நடுவில் உள்ள Home பட்டனை தொட வேண்டும். Save option தற்போது தரக்கூடாது.
பள்ளி வளாகத்திற்குள் சென்றவுடன், மற்ற ஆசிரியர்களின் வருகையை உறுதி செய்த பின், recent used application (இடது ஓர பட்டன்) திறந்து, எமிஸ் செயலியில் Save option தர வேண்டும்.
உடனே ஆசிரியர் வருகை விவரம் நமது கைபேசியில் பதிவாகும்.
ஒரு வேளை சுற்றிக் கொண்டிருந்தால், எமிஸ் செயலியை Close செய்யாமல், முன்பு செய்தவாறு மினிமைஸ் செய்யலாம். அல்லது home பட்டனை அழுத்தலாம்.
இவ்வாறு செய்வதன் மூலம் சர்வர் பிசி குறையும் போது, கைபேசியில் Save ஆகியிருந்த ஆசிரியர் வருகை விவரம், சர்வரில் Save ஆகும்.
இவ்வாறு செய்வதன் மூலம், ஆசிரியர் வருகை பதிவு டென்ஷனை தவிர்க்கலாம்.
பள்ளிக்கு வரும்போதோ அல்லது பள்ளி வளாகத்தை விட்டு வேறு இடத்திலோ ஆசிரியர் வருகையை பதிவு செய்யக் கூடாது.
பள்ளி அமைவிட விவரம் (Longitude and Latitude) எமிஸ் சர்வரில் பதிவு செய்யப் பட்டிருப்பதால், வெளியிடங்களிலிருந்து பதிவு செய்தால், Location தவறு என காட்டக் கூடிய அபாயமும் உள்ளது. ஆகவே முடிந்த வரை, பள்ளி வளாகத்திற்கு வெளியிலிருந்து ஆசிரியர் வருகை பதிவு செய்வதை தவிர்ப்பது நல்லது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE