CPS ஒழிப்பு இயக்கம்.
ஏமாற்றமே!
அனாதையாய் வாழும் மக்களுக்கு வழங்கும் ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் தமிழக அரசு அறுபதாண்டுகள் பணிபுரியும் அரசுஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் மறுப்பது நியாயம் தானா?
வேதனையளிக்கிறதே!
முதல் சட்ட மன்றக் கூட்டத்தொடர் முடிவுபெறும் நாளில் அறிவிப்பு வரும் அறிவிப்பு வரும் என்று நம்பியிருந்த இலட்சக்கணக்கான ஆசிரியர்கள், அரசுஊழியர்களின் அடிமனதில் ஆழப்பாய்ந்ததே! சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் உங்களுக்கு இல்லை என்ற அறிவிப்பு..
தமிழக அரசே!
தமிழக அரசே நியாயம் தானா?
ஐந்து ஆண்டுகள் பணியாற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் 20,000 த்தில் இருந்து 25,000 உயர்த்தி வழங்கி அறிவிப்பு.
அறுபது ஆண்டுகள் மக்களுக்காக உழைத்து ஓடாய்த் தேய்ந்து ஓய்வுபெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஓய்வுபெறும் நாளில் ஓய்வூதியம் தர மறுப்பது நியாயம்தானா?..
ஓய்வூதியம் இது என்ன புதிய கோரிக்கையா?..
ஏற்கனவே எங்களுக்கு வழங்கிய வாழ்வாதார சட்ட உரிமையை பிடுங்கியதைத் தானே திரும்பக் கேட்கிறோம்..
தேர்தல் வாக்குறுதியாக,..
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஓய்வூதியம் இல்லை என்கிற திட்டமான புதிய பென்சன் திட்டத்தை இரத்துசெய்து ஓய்வூதியம் வழங்கும் திட்டமான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்துவோம்னு சொன்னீங்களே!
என்னாச்சு?..
CPS திட்டத்தில் பணி புரியும் எமதருமை ஆசிரியப் பேரினமே!
அரசு ஊழியர்,அரசுப் பணியாளர் தோழமைகளே!..
எதுவும் தானாக மாறாது..
ஆனால், மாறும் என்ற சொல்லைத் தவிர அனைத்தும் மாறும்.
CPS ஒழிப்பு இயக்கம் சங்கம் அல்ல.மாறாக ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து களமாடும் பேரியியக்கம் என்கிற உள்ளார்ந்த புரிதலோடு ஒருங்கிணைவோம், ஒருங்கிணைப்போம்..
நாம் நடத்திய போராட்டங்கள், நாம் நடத்திய இயக்கங்களில் புதிய பென்சன் திட்டத்தை இரத்து செய்யும் கோரிக்கை தான் ஊழியர் உள்ளங்களில் போராட்ட கதாநாயகனாக உச்சம் தொட்டது..
நமது கோரிக்கையை வென்றெடுக்க வேற்றுக் கிரகத்தில் இருந்து யாரும் வரமாட்டார்கள்.
நாம்தான் நாமேதான் களமாட வேண்டும்..
கஜானா காலி என்று சொல்லிவிட்டு பாவம் பசியோடு வாழும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கி விட்டு உங்களுக்கெல்லாம் ஒன்றுமில்லை தள்ளிப்போ என்பவர்களிடம், நமது தரப்பு நியாயத்தை கேட்க வேண்டாமா?
அவர்களிடம் இருந்து நம் கோரிக்கையை அவர்களின் கரங்களில் இருந்து பறித்தெடுக்க வேண்டாமா?
இன்னும் ஏமாற வேண்டாம்..
நம் வாழ்வாதார கோரிக்கையை வென்றெடுக்க ,நேர்த்தியாக திட்டமிட,.
நம் வலியையும், வலிமையையும் அரசுக்கு உணர்த்த,.
சங்கம் வளர்த்த மாமதுரையில் 19.09.2021 (ஞாயிறு) அன்று சங்கமிப்போம்..
வாருங்கள் உறவுகளே!
தலைமுறை காக்கும் மகத்தான பயணத்திற்குத் தயாராவோம்..
என்றும் நமக்காக களத்தில்..
CPS ஒழிப்பு இயக்கம்,
மாநில மையம்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE