சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அடுத்த கல்வியாண்டு முதல் சமூகநீதி தொடர்பான புதிய பாடத்திட்டம் அறிமுகம் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்
பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் சமூக நீதி தொடர்பான புதிய படிப்பை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் இளங்கலை மாணவ-மாணவிகள் இன்றைய கால சூழலுக்கு ஏற்ப பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த புதிய பாடத்திட்டம் அடுத்த கல்வியாண்டு முதல் இளங்கலை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது விருப்ப பாடமாக தான் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. கட்டாய பாடம் அல்ல. அரசியல் நோக்கோடு இந்த பாடங்கள் இருக்காது. சமூக நீதியை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இதில் எந்த அரசியலும் இல்லை.
அதேபோல் திராவிட ஆய்வு மையத்துக்கு தமிழக அரசு ரூ.3 கோடி நிதி அளித்துள்ளது. இதன் மூலம் திராவிடமும் பொறியியலும், திராவிடமும் இலக்கியமும் என்ற புதிய ஆராய்ச்சி திட்டங்களை உருவாக்க இருக்கிறோம்.

No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE